தெற்கு அதி வேகப்பாதையில் இதுவரை 2, 590 விபத்துக்கள்: லக்ஸ்மன் கிரியெல்ல

302

தெற்கு அதிவேகப் பாதை திறக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரை 2, 590 விபத்துக்கள் பதிவாகியிருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் புத்திக்க பத்திரன எழுப்பிய வாய் மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த விபத்துக்கள் காரணமாக 20 பேர் வரை உயிரிழந்திருப்பதுடன், 402 பேர் படு காயமடைந்திருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த அதிவேகப் பாதையில் தொடர்ந்து விபத்துக்கள் இடம்பெறும் பகுதி இன்னும் அடையாளப் படுத்தப்படாமை தொடர்பில் புத்திக பத்திரன கேள்வி எழுப்பியிருந்த வேளை, விபத்து இடம்பெறும் இடங்கள் தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

lakshman-kiriella_CI-720x480

இதேவேளை கண்டி-கொழும்பு அதிவேகப் பாதையின் வேலைகள் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ளதாகவும், ருவன்புர அதிவேகப் பாதையின் கட்டுமாணப்பணிகள் தொடர்பாக முதலீட்டாளர்களை கண்டறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

SHARE