தெலுங்கு ரீமேக்கில் ராட்சஸன்

194

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ராட்சஸன், விஷ்ணு விஷால் அமலா பால் நடிக்க படத்தை திரில்லர் கதையாக இயக்கியிருந்தார் இயக்குனர் ராம் குமார்.

இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்ததோடு விஷ்ணு விஷாலுக்கு மிக முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய நடிகர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் முடிவு செய்துள்ளாராம்.

இளம் நடிகரான அவர் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறார். இதற்காக நல்ல கதைக்களம் கொண்ட படமான ராட்சஸன் தனக்கான பாதையை அமைத்து தரும் என நம்புகிறாராம்..

அதே வேளையில் இப்படத்தை இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்க இருவரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்.

SHARE