தேங்கியுள்ள முறைப்பாடுகளை விசாரிக்க விசேட குழு

243
மனித உரிமைகள் ஆணையகத்தில் தேங்கியுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஒன்றை மனித உரிமைகள் ஆணையகம் மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் பொலிஸாரின் அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளே அதிகம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல்போனார், பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தவர்கள் மரணித்தமை, பொலிஸாரால் சித்தரவதைகளுக்கு உட்படுத்தப்படுதல், அரச பணியாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற அநீதிகள் தொடர்பான முறைப்பாடுளே அதிகம் பதிவாகியுள்ளதாகவும் ஆணையத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
SHARE