கடந்த கால யுத்த சூழ் நிலையில் தலையில் பாரிய விழுப்புண் ஏற்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்கின்ற பருத்திச்சேனை வவுனதீவு பகுதியைச் சேர்ந்த த.மகாலிங்கம் அவருக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நயினாதீவு இளையோர் கழகத்தின் நிதி அனுசரணையில் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு இலட்சம் பெறுமதியான ஆடுகள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன் போது அவ்வமைப்பின் இயக்குனர் கே. பிரபாகரன் அதன் அங்கத்தவர்களான எம். அஜந்தன் மற்றும் லவநாதன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.