தேசியக் கொடிகளை ஏற்றுமாறு கோரிக்கை

273
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ம் திகதி இலங்கையின் 68ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அரசாங்க நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடியை பறக்க விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கொழும்பு காலி முகத் திடலில் நடைபெறவுள்ளது.

தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச விவகார அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு முப்படையினர்ää பொலிஸார் மற்றும் பிரபல இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE