
சிங்களவர்களின் ஒரு நாடு என்னும் கோட்பாட்டை நான் மிகவும் ஆதரிக்கின்றேன். புலி இலங்கை முழுவதையும் ஆட்சி செய்தால் அது சாத்தியமாகும். அன்று சீன பேரரசன் சீன தேசம் சகலவற்றையும் ஒன்றிணைக்க பாடுபட்டது போல், நம் இலங்கையும் ஒரு நாடாக இருந்தால் மிக நன்றாகத் தான் இருக்கும்.
அயல் நாடான இந்தியாவில் உள்ளது போல், இலங்கையில் இரண்டு மாகாணங்கள்; இரு வேறு மொழிகள்; இரு வேறு கலாச்சாரம். மேதகு வே. பிரபாகரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதியாக பதவியேறுவதை சற்று கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு கட்டிடம் கட்டுவதற்கு அத்திவாரம் பலமாக இருக்க வேண்டும் என்பது போல், ஒரு நாடு வளர்ச்சியடைவதற்கு, அதன் கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். இலங்கை சிங்கள அரச கட்டமைப்பை விட, புலிகளின் கட்டமைப்பு அதி உயர்ந்ததாகவே காணப்படுகிறது.
பாலஸ்தீன இயக்கத்தைப் பின்பற்றி புலிகள் இயக்கம் தொடக்கப் பட்டாலும் கூட, இன்று உலகிலேயே மிகவும் கட்டுக்கோப்பான, பலம் வாய்ந்த, மற்றய நாடுகளின் கவனத்தை ஈர்க்கின்ற இயக்கமாக விளங்குகிறது.
இப்போது புலிகளால் ஆளப்படும் இடங்களைப் பொறுத்தவரை:
– சாதி ஒளிக்கப்பட்டுவிட்டது
– இலஞ்சம்: பேச்சுக்கே இடமில்லை
– மக்கள் எவ்வாறு கையாளப் படுகிறார்கள்
– புதிய தொழில் செய்வதற்கு, புலிகளால் மக்களுக்கு பண உதவி வழங்கப் படுகிறது;
– வங்கி, பேரூந்து சேவை, காவல்துறை, நீதி மன்றம், காலநிலை அறிக்கை அலுவலகம், வானொலி சேவை, தொலைக்காட்சி சேவை, மேலும் பல; நன்றே நடைபெறுகிறது
– மற்றய அரசியல்வாதிகள் போல் இல்லாமல், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காப்பாற்றப் படுகிறது…1
இராணுவக் கட்டமைப்புக்களைப் பாருங்கள்…
தரைப்படைகள்
————————-
■ இம்ரான் பாண்டியன் படையணி.
■ ஜெயந்தன் படையணி.
■ சார்லஸ் அன்ரனி சிறப்புப் படையணி.
■ கிட்டு பிரங்கிப் படையணி.
■ குட்டிச்சிறி மோட்டார் படையணி.
■ இராதா வான்காப்பு படையணி.
■ சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி.
■ விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
■ சோதியா சிறப்புப் படையணி.
■ மாலதி சிறப்புப் படையணி.
■ அன்பரசி படையணி.
■ ஈருடப் படையணி.
■ குறி பார்த்துச் சுடும் படையணி.
■ சிறுத்தைப் படையணி.
■ எல்லைப்படை,
■ துணைப்படை,
■ பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு.
■ ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு.
■ பாதுகாவலர் பிரிவு.
■ முறியடிப்புப் பிரிவு.
■ கப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு ரோந்து அணி.
■ ஆழ ஊடுருவும் படையணி.
■ உந்துருளிப் படையணி
கடற்படைகள்.
———————-
■ கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு.
■ கடல் வேவு அணி.
■ சார்லஸ் சிறப்பு அணி.
■ அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்).
■ சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி (ஆண்கள்).
■ கடற்சிறுத்தை சிறப்பு அணி.
■ சங்கர் படையணி.
■ வசந்தன் படையணி.
■ சேரன் படையணி.
■ பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி.
■ வான்படை.
■ கரும்புலிகள்.
■ புலனாய்வுத்துறை.
■ வெளியகப் புலனாய்வுப் பிரிவு.
■ உள்ளகப் புலனாய்வுப் பிரிவு.
■ படையப் புலனாய்வுப் பிரிவு (MI)
■ தேசியப் புலனாய்வுப் பிரிவு
■ வேவுப் பிரிவு.
■ களமுனை முறியடிப்புப் பிரிவு.
■ களமுனை மருத்துவப் பிரிவு.
■ கணினிப் பிரிவு.
■ பொறியியல் பிரிவு.
■ விசேட வரைபடப் பிரிவு.
■ அரசியல் துறை,
■ பரப்புரைப் பிரிவு,
■ கொள்கை முன்னெடுப்புப் பிரிவு.
■ தமிழீழ படைத்துறைப் பள்ளி.
■ ஆயுத உற்பத்திப் பிரிவு.
■ மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு.
■ மாவீரர் பணிமனை.
அந்த உள்கட்டமைப்புக்கள் பின்வருமாறு:
■ தமிழீழ காவல்துறை, குற்றத் தடுப்புக் காவல் துறை, குற்றப் புலனாய்வுப் பிரிவு.
■ தமிழீழ வைப்பகம்.
■ தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
■ தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம்.
■ சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி.
■ கிராமிய அபிவிருத்தி வங்கி.
■ அனைத்துலகச் செயலகம்.
■ நந்தவனம் (வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம்)
■ சுங்க வரித்துறை.
■ தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம்.
■ அரசறிவியற் கல்லூரி.
■ வன வளத்துறை.
■ தமிழீழ நிதித்துறை.
■ தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள்.
■ கலை பண்பாட்டுக்கழகம்.
■ மருத்துவப் பிரிவு.
■ திலீபன் சிறப்பு மருத்துவமனை.
■ பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை.
■ மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு.
■ சுகாதாரப் பிரிவு.
■ ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு.
■ போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு.
■ நிர்வாக சேவை.
■ அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்.
■ மீன்பிடி வளத்துறை.
■ விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
■ தொழில் நுட்பக் கல்லூரி.
■ சூழல் நல்லாட்சி ஆணையம்.
■ தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை.
■ தமிழீழ விளையாட்டுத்துறை.
■ தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.
■ தமிழீழ போக்குவரவுக் கழகம்.
■ மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு).
■ வளங்கள் பகுதி.
■ மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
■ விலங்கியல் பண்ணைகள்.
■ விவசாயத் திணைக்களம்.
■ தமிழ்மொழி காப்பகம்.
■ தமிழீழ சட்டக்கல்லூரி.
■ தமிழீழ கல்விக் கழகம்.
■ தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை.
■ காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது).
■ செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது).
■ செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது).
■ வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
■ அன்பு முதியோர் பேணலகம்.
■ இனிய வாழ்வு இல்லம். (காது கேளாத, வாய் பேசாத, பார்வை இல்லாத ஊனமுற்ற சிறுவர் சிறுமிகளுக்கானது)
■ சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது).
■ நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
■ மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
■ சீர்திருத்தப் பள்ளி.
■ முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி).
■ புனிதபூமி மகளிர் காப்புத்திட்டம்
■ உதயதாரகை (விதவைகளுக்கானது).
■ பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்.
■ பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது).
■ எழுகை தையல் பயிற்சி மையம்.
■ மாணவர் அமைப்பு.
■ பொத்தகசாலை (அறிவு அமுது).
■ ஒளிப்பட பதிவுப் பிரிவு. திரைப்பட வெளியிட்டுப் பிரிவு.
■ நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு).
■ தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது).
■ விடுதலைப்புலிகள் செய்தி இதழ்.
■ சுதந்திரப் பறவைகள் (பெண்கள் செய்தி இதழ்).
■ ஈழநாதம் (தினச்செய்தி பத்திரிக்கை).
■ வெளிச்சம் (மாத சஞ்சிகை).
■ நாற்று (மாத சஞ்சிகை).
■ பொற்காலம் வண்ணக் கலையகம்.
■ அருச்சுனா புகைப்படக் கலையகம்.
■ ஒளிநிலா திரையரங்கு.
■ புலிகளின் குரல் வானொலி.
■ தமிழீழ வானொலி.
■ தமிழீழ தேசியத் தொலைக்காட்சி.
■ பல சமூக செய்தி இணையத் தளங்கள்.
■ தமிழீழ இசைக்குழு.
■ காலணி (பாதணி உற்பத்தி மையம்)
■ சேரன் உற்பத்திப் பிரிவு.
■ சேரன் வாணிபம்.
■ சேரன் சுவையகம்.
■ சேரன் வெதுப்பகம்.
■ சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி).
■ பாண்டியன் உற்பத்திப் பிரிவு.
■ பாண்டியன் சுவையூற்று.
■ பாண்டியன் பல்பொருள் வாணிபம்.
■ சோழன் தயாரிப்புகள்.
■ பொன்னம்மான் உரைவகை வாணிபம்.
■ தென்றல் இலத்திரனியலகம்.
■ தமிழ்மதி நகை மாடம்.
■ தமிழ்நிலா நகை மாடம்.
■ தமிழரசி நகை மாடம்.
■ அந்திவானம் பதிப்பகம்.
■ இளந்தென்றல் குடிவகைப் பிரிவு.
■ இளவேனில் எரிபொருள் நிலையம்.
■ இளந்தென்றல் தங்ககம் (Lodge).
■ 1-9 தங்ககம் (Lodge)
■ மருதம் வாணிபம்.
■ மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்).
■ மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி).
■ கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை.
■ மாவீரர் அரங்குகள்.
■ மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்.
■ மாவீரர் நினைவு வீதிகள்.
■ மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்.
■ மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்.
■ மாவீரர் நினைவுப் பூங்காக்கள்.
■ மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்.
■ மாவீரர் நினைவு நூலகங்கள்.
■ மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்.
■ மாமனிதர் விருதுகள் (சமூக, பொதுத் தொண்டுகள் செய்வோருக்கானது)
இலங்கையை புலி ஆட்சி செய்தால், சுற்றி இருக்கும் நாடுகளை விட, ஏன் இந்தியாவையே விட, மிகப் பெரிய வலுமிக்க நாடாக வரும் என்பதில் ஐயப்பாடில்லை. இந்தியாவின் அளுமை மிக்க பிராந்தியத்தில் இன்னொரு நாடு தலை எடுக்க விருப்பம் இல்லாமலே தன் இந்தியா தமிழர் பிரச்சனையை ஊதி ஊதிப் பெரிதாக்கி விட்டது. புலி இலங்கை முழுவதையும் ஒரு நாடாக ஆட்சி செய்தால், சிங்களவர்களின் வேண்டுகோளும், தமிழர்களின் பிரச்சனையும் தீரும்!