ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில், மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்ட பலருக்கு இடமளிக்கப்படாத அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிப்பதில்லை என்ற சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐதேக, ஜேவிபி ஆகிய கட்சிகள் நேற்று தமது தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 29 வேட்பாளர்களின் விபரங்களை வெளியிட்டன.
இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட- மகிந்த ராஜபக்சவினால் முன்மொழியப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, முன்னாள் இராஜதந்திரி தயான் ஜெயதிலக, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா ஆகியோருக்கு தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.
எனினும், மகிந்த பரிந்துரைத்திருந்த ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலர் சரித்த ஹேரத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேசியப்பட்டியலில் இடமளித்திருக்கிறது.
அதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படாது என்றும், புலமையாளர்களுக்கே அதில் இடமளிக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக தகவல்கள் தெரிவித்தன.
எனினும், அதனை மீறி பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதில் இடம்பிடித்துள்ளனர்.
அத்துடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் தேசியப்பட்டியல் மூலம் தெரிவான முன்னாள் பிரதமர்களான டி.எம்.ஜெயரட்ண, ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஆகியோருக்கும் இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படவில்லை.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தேசியப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
வாசுதேவ நாணயக்கார மட்டுமே இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுகிறார்.
அதேவேளை டியூ.குணசேகர, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், கடந்த முறை நுவரெலிய மாவட்டத்தில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிரங்கா ஜெயரத்தினம், ஐதேகவின் முன்னாள் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளர்கள்
ஏ.எச்.எம்.பௌசி
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்
டியூ.குணசேகர
பேராசிரியர் திஸ்ஸ விதாரண
பேராசிரியர் எச்.ஆர்.எஸ்.மொகமட்
கலாநிதி சரத் அமுனுகம
திஸ்ஸ அத்தநாயக்க
டிலான் பெரேரா
சிறிரங்கா ஜெயரத்தினம்
ரெஜினோல்ட் குரே
ஜீவன் குமாரதுங்க
ரிரான் அலஸ்
மலித் ஜெயதிலக
சிரால் லக்திலக
பேராசிரியர் கொல்வின் குணரத்ன
பிரபா கணேசன்
பைசர் முஸ்தபா
பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க
பேராசிரியர் கபில் குணசேகர
கலாநிதி பி.ஏ.ரத்னபால
சரித்த ஹேரத்
கே. கணேசமூர்த்தி
லெஸ்லி தேவேந்திர
சோமவீர சந்திரசிறி
எஸ்யு.லெப்பை
ஜெயந்த வீரசிங்க
பியசிறி விஜேநாயக்க
எவ்.எம்.முஸம்மில்
ஜி.குமாரதுங்க