தேசியப் பிரச்சினைக்கு இலங்கையே தீர்வு வழங்க வேண்டும் – இந்தியப் பிரதிநிதிகள்

202

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு இலங்கையே தீர்வு வழங்க வேண்டுமென இந்தியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் இலங்கைப் பிரதிநிதிகளிடம், இந்திய பிரதிநிதிகள் நேற்று இதனைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் அரசியல் அமைப்பினை உருவாக்கும் பணிகளை இலங்கையே மேற்கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை ஊடகவியலாளர்கள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளது.

எட்கா உடன்படிக்கையினால் நீண்ட கால அடிப்படையில் இலங்கைக்கு நன்மை ஏற்படும் என சில இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, எட்கா உடன்படிக்கைக்கு பொறியியலாளர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் தரப்பினர் பலர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக இலங்கை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறெனினும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் எனவும் இரு தரப்பிற்கும் நன்மைகள் ஏற்படும் எனவும் இந்திய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SHARE