தேசிய அடையாள அட்டைக்கான கட்டணத்தில் திருத்தம் : கட்டண விபரங்கள் இதோ !

183

ஆட்களைப் பதிவுசெய்து அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம் அறிவித்துள்ளது.குறித்த கட்டணத்திருத்தம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுல் படுத்தப்படவுள்ளது.

15 வயதைப் பூர்த்தியடைந்து முதற் தடவையாக பதிவு செய்து அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பத்திற்கு திருத்தம் செய்யப்பட்ட கட்டணமாக 100 ரூபா அறவிடப்படுகின்றது.

தேசிய அடையாள அட்டையொன்றில் திருத்தம்  செய்துகொண்டு அதன் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 250 ரூபா அறவிடப்படுகின்றது.

இதேவேளை, காணாமல்போன தேசிய அடையாள அட்டையொன்றின் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்கு 500 ரூபா அறவிடப்படுகின்றது.

இந்நிலையில் குறிப்பிட்ட கட்டணங்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து பிரதேச செயலகங்களின் ஊடாகவோ அல்லது கிராம சேவகர் ஊடாகவோ செலுத்தி பெறப்பட்ட பற்றுச்சீட்டினை விண்ணப்பத்தில் உரிய பகுதியில் கழறாதவாறு இணைத்து ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் திருத்தியமைக்கப்பட்ட புதிண கட்டணங்களை வறுமையின் காரணத்தினால் செலுத்த முடியாதவர்கள் கட்டணம் செலுத்தமுடியாமைக்கான காரணத்தினை பிரதேச செயலாளரிடம் பெறப்பட்ட கட்டணம் செலுத்த இயலாமைக்கான அத்தாட்சிக் கடிதத்தை அடையாள அட்டை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.

இதேவேளை, இது தொடர்பான மேலதிக விபரங்களை அந்தந்தப் பிரதேச கிராம உத்தியோகத்தரிடமோ அல்லது பிரதேச செயலகத்திலோ பெற்றுக்கொள்ள முடியுமென ஆட்களைப்பதிவுசெய்யும் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

SHARE