தேசிய அரசாங்கத்தின் முதலாமாண்டு நிறைவு! மாத்தறையில் விசேட வைபவம்

249

625.117.560.350.160.300.053.800.210.160.90

இலங்கையின் சமகால தேசிய நல்லிணக்க அரசாங்கத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு விசேட வைபவம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இன்று பிற்பகல் இடம்பெறும்.

புதிய நாடு, புதிய பயணம் மற்றும் ஐந்து வருடங்களுக்கான பயணத்திற்கு முதலாண்டு நினைவாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளனர்.

சமகால அரசாங்கம் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த சலுகைகள், உரிமைகள் போன்றவற்றை வெளிக்காண்பிக்கும் விசேட கலையம்சமும் இன்று இடம்பெறும்.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE