தேசிய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா கடந்த வாரம் மாத்தறையில் இடம்பெற்ற நிலையில் அதில் வெறுமனே 2000 பேர் மாத்திரமே கலந்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இதன் காரணமாகவே எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைக்கபட்ட நாள் முதல் அதனை விமர்சித்து வரும் தனக்கும் இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு தபால் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்நிகழ்வில் ஜனாதிபதியின் உரை தொடர்பில் கருத்துரைத்த அவர் ஜனாதிபதியின் கருத்துக்களானது ஒரு ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமற்ற ஒன்றெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி உரையாற்ற மேடையில் ஏறி முன்னால் பார்க்கும் போதும் எவரும் இருக்கவில்லை. பின்னால் பார்க்கும் போதும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், ஜோன் செனவிரத்ன, நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டவர்களே ஜனாதிபதியின் கண்களுக்கு சிரேஸ்ட உறுப்பினர்கள் என அவர் மேலும் தெரிவித்தள்ளார்.