தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டேவிட் டெலி சந்தித்து உரையாடியுள்ளார்

342

 

தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதுவர் டேவிட் டெலி சந்தித்து உரையாடியுள்ளார்.

mano 77errr

இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பு தேசிய கலந்துரையாடல் அமைச்சில் நடைபெற்றது. தூதுவருடன் ஐரோப்பிய யூனியனின் தெற்காசியாவுக்கான தலைமை அதிகாரி ஹான்ஸ் பார்ன்ஹாமர், ஐரோப்பிய யூனியனின் அபிவிருத்திக்கான தலைமை அதிகாரி லிபுஸ் சொக்போவா ஆகியோரும் சந்திப்பில் கலந்துக்கொண்டனர். இனங்களுக்கு மத்தியில் தேசிய சகவாழ்வு, மும்மொழி கொள்கை அடிப்படையில் மொழியுரிமையை உறுதிப்படுத்துவது மற்றும் தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சுக்கான உத்தேச ஐரோப்பிய யூனியனின் உதவிகள் ஆகியவை பற்றி கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

SHARE