இலங்கையின் சுதந்திரத்தினத்தன்று தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைமீறல் மனுவை, உயர்நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
களனி பிரதேசத்தை சேர்ந்த மூவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு நேற்று அழைக்கப்பட்ட போது ஜூன் முதலாம் திகதி விசாரணை நடத்தப்படும் என்று திகதி குறிக்கப்பட்டது.
மனுவில் பிரதிவாதிகளாக ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் மூன்றாம் அட்டவணையின்படி தேசிய கீதம் சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.