தேசிய பாதுகாப்பு தொடர்பில் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்: ரணில்

231
ranil-prathamar-720x480
யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்ற விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வந்து கூறவேண்டும்.

அதேநேரம் இந்த சம்பவம் தொடர்பாக தமக்கு கிடைத்துள்ள தகவல்களை முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது கருத்துரைத்த அவர், மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்துரைத்தால், அது தொடர்பில் விவாதிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ், இந்த ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்படவிருந்ததாக தெரிவித்த தகவல் தொடர்பில் பொலிஸார் அவரை விசாரணை செய்ய வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாதம் மீண்டும் தலையிடுக்க அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன் இனவாதத்துக்கு இடமளிக்கப்படாது என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

SHARE