தேசிய விழாவாக கொண்டாட இருக்கும் சித்திரை புத்தாண்டு

261
இந்த வருடம் அட்டனில் நடைபெறவுள்ள சித்திரை புத்தாண்டை தேசிய விழாவாக கொண்டாட அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

கல்வி இராஜாங்க அமைச்சின் கீழ் இடம்பெறவுள்ள இந்த புத்தாண்டு நிகழ்வில் பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

அந்தவகையில் மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் ஆண், பெண் இருபாலர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், தமது விண்ணப்பங்களை வைத்தியசான்றிதலுடன், விளையாட்டுத்துறை அதிகாரி, பிரதேச செயலாளர் காரியாலயம் அம்பகமுவ என்ற முகவரிக்கு எதிர்வரும் 8ஆம் திகதி முன் அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

23-tamil-new-year300

 

SHARE