தேசிய விவசாயிகளையும் தேசிய கைத்தொழிலாளர்களை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை – ஜனாதிபதி

360

 

தேசிய விவசாயிகளையும் தேசிய கைத்தொழிலாளர்களை மேம்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதை புதிய அரசாங்கம் முக்கிய பணியாகவும் கொள்கையாகவும் கருதி செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
batt my3 visit g8787871200 லட்சம் ரூபா செலவில் பொலன்நறுவை செவனப்பிட்டிய நிர்மாணிக்கப்பட்ட வாராந்த சந்தை கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, வெலிகந்த பிரதேசத்தில் உள்ள சகல வீதிகளும் இந்த வருடத்திற்கு நிர்மாணித்து முடிக்கப்படும்.

பொலனநறுவை மாவட்டத்தில் உள்ள 6 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 6 பிரதான பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதனிடையே திம்புலாகல பெலேடியாவ பிரதேசத்தில் 350 ரூபா செலவில் நிர்மாணிக்கப்படட குடிநீர் திட்டத்தை ஜனாதிபதி மக்களின் பயன்பாட்டுக்காக ஆரம்பித்து வைத்தார்.

SHARE