தேசிய வைத்தியசாலையில் நள்ளிரவில் வழங்கப்பட்ட இரவு உணவு

127

 

தேசிய வைத்தியசாலையில் நேற்று (11) இரவு 11.30 மணியளவில் இரவு உணவு பரிமாறப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் பிற்பகல் அலுவலக ஊழியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் இரவு உணவு தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்றுக்கொடுக்க பொறுப்பான யாரும் இல்லாமையே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலைமையை சமாளித்து அதிகாரிகள் உரிய முறையில் செயற்படாத காரணத்தினால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளியான காரணம்
இருப்பினும், உணவகமொன்றிலிருந்து 2500 உணவுப்பொதிகளை பெற்றுக்கொள்ள வைத்தியசாலை அதிகாரிகள் முயற்சித்த போதிலும், அந்த உணவகத்தில் 2500 உணவுப்பொதிகளை தயாரிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE