மாலத்தீவுக்கு தேனிலவு வந்த இளம் தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கப்படுவதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.
பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் லியோமர். இவர் தனது புதுமனைவி எரிகா லேக்ரதில்லாவுடன் மாலத்தீவுக்கு தேனிலவு வந்தார்.
இந்நிலையில் அங்குள்ள கடலில் இருவரும் குளித்த போது லியோமர் திடீரென மூழ்க தொடங்கினார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மனைவி எரிகா கணவரை காப்பாற்ற முயன்ற நிலையில் அவரும் நீரில் மூழ்கினார்.
பின்னர் இருவரையும் மீட்ட மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதனிடையில் எரிகாவும், லியோமரும் கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இருவரின் உடலும் நறுமணமூட்டிப் பாதுகாத்து வைக்கப்படுவதற்காக இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பிலிப்பைன்ஸின் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்பின்னர் கொழும்பில் இருந்து பிலிப்பைன்ஸின் தலைநகர் Manilaவுக்கு இருவரின் உடலும் கொண்டு செல்லப்படும்.