தேனீர் தர மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த கணவன்

248

காலை தேனீர் தர மறுத்த மனைவியின் கழுத்தை நெரித்த சம்பவம் கேகாலையில் பதிவாகியுள்ளது.

இன்று காலை கணவன் மனைவியிடம் தேனீர் கேட்க அதை மறுத்த மனைவியுடன் நடந்த வாக்கு வாதத்தின் உச்சத்தில் கணவன் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார் . இச்சம்பவத்தின் போது காயமடைந்த மனைவியை வைத்தியச்சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய இரு குழந்தைகளின் தாயே கணவரால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், குடிபோதையில் தினமும் குறித்த பெண்ணை மீரட்டுவதையும் கணவன் வழக்கமாக கொண்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

tee

SHARE