தேர்தலின் பின்னரே சுஜீவ சேனசிங்கவிற்கு காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன

194

இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவிற்கு மெண்டிஸ் நிறுவனம் வழங்கிய காசோலைகள் தேர்தலின் பின்னர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான காசோலைகள் மூன்றினை சுஜீவ சேனசிங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாற்றியிருந்தனர்.

இந்தக் காசோலைகள் மூன்றும் 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் மாற்றப்பட்டவை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் திகதி, 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி மற்றும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி ஆகிய தினங்களில் இந்த காசோலைகள் திகதியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காசோலைகளை மாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்கு மூலங்கள் பதியப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

SHARE