தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தில் தொடர்ச்சியாக இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகிறது.
இதன்போது மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து ஆராயப்பட உள்ளது. குறிப்பாக மாகாணசபைத் தேர்தல் தொடர்பான எல்லை மீள் நிர்ணய அறிக்கை நாடாமன்றத்தில் தோற்கடிப்பட்டது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அவதானம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.