தேர்தல்தொகுதி எல்லை நிர்ணயத்தின் போது குறித்த பகுதி மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும்

328

தேர்தல் தொகுதிகள் எல்லைநிர்ணயித்தல் என்பது குறிப்பிட்ட பகுதியுள்ள மக்களின் பிரதிநிதித்துவத்தை உரிய முறையில் உறுதிசெய்வதாக அமையவேண்டும்.குறிப்பிட்டதொரு அரசியல்கட்சியின் வெற்றியை உறுதிசெய்வதை நோக்கமாக கொண்டு அமையக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் தொகுதி எல்லைநிர்ணயித்தல் என்பது அவசரமாக முன்னெடுக்கப்பட்டால்,அது உண்மையான அர்த்தத்தை இழந்துவிடும். இதன்காரணமாக சற்றுநிதானமா அதனை முன்னெடுக்கவேண்டும் என ஆலோசனைவழங்க விரும்புகின்றேன்.

பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த பிரச்சினைக்கும் தீர்வைகாணவேண்டும்,இந்த விவகாரம் குறித்து சர்வதேச அளவில் இலங்கை விமர்சனங்களிற்கு உள்ளாகியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

SHARE