தேர்தல் பிரச்சாரத்திற்கு கம்பீர குரலுடன் கேப்டன் விஜயகாந்த் வருவார் என்று அவரது மூத்த மகனான விஜய பிரபாகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
“ஆசிரியர்களின் கோரிக்கையை அரசு ஏற்கவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு போதிய வசதிகளை செய்து தரவேண்டும். ஆசிரியர்களின் போராட்டம் தி.மு.க., அ.தி.மு.க. என இரு ஆட்சிகாலத்திலும் மாறிமாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே இதனை பார்த்து பார்த்து நமக்கு பழகிவிட்டது. தி.மு.க. வந்தாலும் இந்த நிலைமை மாறபோவதில்லை.
ஹதரபாத் வளர்ச்சியடைந்திருக்கிறது. தமிழகம் அப்படியேயிருக்கிறது. கல்வியில் இரண்டு மூன்றாம் இடத்திலேயே உள்ளது. ஆட்சி மாறவேண்டும் என்று நான் சொன்னால் சுயநலம் என்பார்கள். என் குற்றச்சாட்டு திராவிட கட்சிகள் மேல் அல்ல ஆளுங்கட்சி மீது தான். அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வரும் கேப்டன் விஜய்காந்த் தேர்தல் பிரச்சாத்திற்கு கம்பீரமான குரலுடன் வருவார்.” என்றார்.
முன்னதாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை சந்தித்து அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டார். பிறகு அவர்களின் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.