தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்: மஹிந்த

302
தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களின் போது இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பு மற்றும் பிரசூரிக்கப்படும் விளம்பரங்களுக்கான கட்டண விபரங்களை வெளியிடும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

இலத்திரனியல் ஊடகமொன்றில் பிரச்சார விளம்பரம் ஒன்று ஒளி, ஒலிபரப்புச் செய்யப்படும் ஒவ்வொரு தடவையும் அதற்கான கட்டணத்தை வெளியிட வேண்டும்.

அச்சு ஊடகங்களில் பிரசூரம் செய்யும் போதும் இவ்வாறு கட்டண விபரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.

தேர்தல்களின் போத சில வேட்பாளர்கள் பாரியளவில் பணத்தை செலவிட்டு விளம்பரம் செய்யும் அதேவேளை, சிலர் பணமின்றி விளம்பரங்களை செய்வதில்லை.

தேர்தல் பிரச்சாரங்களுக்காக செலவிடப்படும் பாரியளவு தொகை விரயமாக்கப்படுவதாக சில அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களின் போது தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் தொடர்பில் சில சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இது தொடர்பிலான உத்தேச சட்ட யோசனை ஒன்றை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

SHARE