தேவி படத்தை தொடர்ந்து மீண்டும் பிரபு தேவாவுடன்! இப்படி ஒரு டைட்டிலா

323

 

இயக்குனர் ஏ.எல்.விஜய் சமீபத்தில் தான் தேவி படத்தை வெளியிட்டார். பிரபு தேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடித்த இப்படம் ஒரு திகில், கவர்ச்சி, ரொமான்ஸ் என படம் ஒரு மசாலாவாக இருந்தாலும் சுமாராக தான் ஓடியது.

ஓரளவு கலெக்‌ஷன் மட்டுமே. தற்போது சாய் பல்லவியை வைத்து கரு என்னும் படத்தை எடுத்து வருகிறார். இதுவும் ஒரு ஹாரர் திரில்லர் படமாம். லைகா நிறுவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜியும் இப்படத்தில் நடிக்கிறார்.

இதை தொடர்ந்து விஜய் அடுத்த படத்திற்கான பூஜையையும் நேற்று போட்டுள்ளார். இதில் பிரபு தேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க படத்திற்கு லட்சுமி என டைட்டிலையும் அறிவித்து விட்டார்கள்.

SHARE