தைராய்டு பிரச்சனை: கல் உப்பின் மூலம் இதை தடுக்கலாமே

839

பெரும்பாலும் பெண்களே தைராய்டு பிரச்சனையினால் பாதிக்கப்படுகின்றனர். தைராய்டு என்பது முன்கழுத்தில் உள்ள நாளமில்லா சுரப்பியாகும்.

தைராய்டு சுரப்பி சுரக்கும் ஹார்மோன்களே திசுக்களின் வளர்சிதை மாற்றத்தினை கட்டுப்படுத்த உதவுகிறது.

சத்து குறைப்பாடு, மன அழுத்தம் போன்றவற்றினால் இந்த பிரச்சனையானது ஏற்படுகிறது. சில குழந்தைகள் பிறக்கும் போதே தைராய்டு பிரச்சனையுடன் பிறக்கின்றன.

அறிகுறிகள்
  • கழுத்து வீக்கம்
  • எடை அதிகரிப்பு
  • படபடப்பு, கைநடுக்கம்
  • அதிக குளிர் உணர்தல்
  • மூச்சுவிடுதலில் சிரமம்
  • நாக்கு வறண்டு போதல்
  • உடல் சோர்வு
பாதிப்புகள்

தைராய்டு பிரச்சனையினால் மாதவிடாய் தொந்தரவு ஏற்படும்.

தைராய்டு சுரப்பியானது சரியாக சுரக்காவிட்டால் திசுக்களின் வளர்சிதை மாற்றமானது கட்டுப்படுத்தப்பட்டு உடல் இயக்கம் முழுவதும் பாதிப்பிற்குள்ளாகும்.

குறைவான அளவிற்கு உணவினை எடுத்து, உடற்பயிற்சியினை மேற்கொண்டாலும் உடல் எடையானது அதிகரிக்கும்.

இரவில் தூக்கமின்மை, உணவினை விழுங்கும் போது வலி ஏற்படும்.

தைராய்டு அளவு குறைந்தால் கழுத்து வீக்கம், உடல் வளர்ச்சி குறைதல், மனவளர்ச்சி குறைபாடு, ஒல்லியாக இருத்தல் போன்ற குறைபாடுகள் தோன்றும்.

பாதுகாக்கும் முறை

தைராய்டு பரம்பரை பிரச்சனையாக வரக்கூடியது என்பதால் சிறுவயதிலேயே தைராய்டு பிரச்சனை உள்ளதா என்பதை சோதிப்பது அவசியம்.

பெண்கள் பருவமடையும் சமயத்தில் முகப்பரு, முடி கொட்டுதல், மறதி, படபடப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தைராய்டு உள்ளதா என பரிசோதனை செய்யவேண்டும்.

உணவில் கல் உப்பினை பயன்படுத்துவதன் மூலம் உடலில் அயோடின் குறைபாட்டினை தடுக்கலாம்.

சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு தொண்டையில் படும்படி குடிப்பதன் மூலம் தொண்டையில் அயோடின் சேர வாய்ப்புள்ளது.

கட்டுபடுத்தும் முறை

தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடிமிக்ஸ், முட்டைகோஸ், முள்ளங்கி, குளிர்பானங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்.

தினமும் 4 முதல் 5 கிராம் வரையுள்ள அயோடின் உப்பினை மட்டுமே எடுத்து கொள்ளவேண்டும்.

கீரை வகைகளை அவற்றை வேகவைத்த தண்ணீரை வடித்துவிட்டு பயன்படுத்தலாம்.

முழுதானியங்கள், முளைகட்டிய பயிறு வகைகள், பழச்சாறு, பசலைக்கீரை, எள், பூண்டு மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடவேண்டும்.

செலினியம் அதிகம் உள்ள இறைச்சி, மீன், காளான்கள், சோயாபீன்கள், சூரியகாந்தி விதைகள் மிக அவசியம்.

சிகிச்சை

ஐசோடோப் என்னும் அணுவியல் சிகிச்சையில் கதிர் இயக்கத்தன்மையுடைய இம்மருந்தினை வாய்வழியே செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தைராய்டு சிகிச்சை என்பது தைராய்டு கிளாண்டை முழுவதுமாகவோ அல்லது பாதியோ வெட்டி எடுத்தல் இதனுடன் கதிரிவீச்சு அயோடின் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

SHARE