
தேவை என்றால் தொகுதி அமைப்பாளர் பதவிக்கு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் விண்ணப்பம் செய்ய முடியும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பசிலும் விண்ணப்பம் செய்து நேர்முகத் தேர்வில் பங்கேற்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாருக்கு பதவி வழங்க வேண்டும் என்பதனை ஊடகங்கள் நிர்ணயிக்க முடியாது எனவும், கட்சியே தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சஜின் வாஸ் குணவர்தன குற்றமற்றவர் என தாம் கூறவில்லை எனவும் கட்சியை தூய்மைபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.