2 பேருந்துகள் மற்றும் பௌசர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று(29.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக மாத்தறைக்கு செல்லும் வீதியில் சுமார் 5 கிலோமீற்றர் வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதில் பதினொன்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடுஅவர்கள் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
மூன்று வாகனங்களையும் சாரதிகள் கவனக்குறைவாக செலுத்தியமையே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.