வாழைமலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (11.01.2024) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதோடு சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
உரிய பாதுகாப்பு
மேலும் இந்த கடவையில் பல விபத்து சம்பவங்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்ட போதிலும், அதனை பாதுகாப்பான கடவையாக மாற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளதோடு உரிய பாதுகாப்பினை அரசாங்கமும் அரசியல்வாதியும் மேற்கொள்ளுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.