தொடரும் அதிரடி புதிய மைல்கல்லை எட்டிய யுவராஜ் சிங்

222

ரஞ்சி டிராபி போட்டியில் பஞ்சாப் அணியின் தலைவர் யுவராஜ் சிங் சதம் விளாசி அசத்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் ரஞ்சி டிராபி போட்டியில் பஞ்சாப் அணிக்கு தலைவராக செயல்படுகிறார்.

இந்நிலையில் நேற்று தொடங்கிய மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக ஆடிய யுவராஜ் சிங் சதம் அடித்தார்.

அதே போல் யுவராஜ் சிங்குடன் சிறப்பாக ஆடி வந்த குர்கீரட் சிங்கும் சதம் அடித்தார்.

பஞ்சாப் அணி நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்களை குவித்துள்ளது.

யுவராஜ் சிங் 164 ஓட்டங்கள் (24 பவுண்டரி), குர்கீரட் சிங் 101 ஓட்டங்கள் (16 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து களத்தில் உள்ளனர்.

முதல் தரப் போட்டிகளில் யுவராஜ் சிங்கிற்கு இது 25வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE