தொடரும் கடும் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

279
பெய்து வருகின்ற கடும் மழை காரணமாக, நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மலையகத்தில் பெய்து வரும் மழை காரணமாக நுவரெலியா நகரத்தில் பாரிய வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மரக்கறி செய்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பருவகால பயிரான லீக்ஸ் பாரிய விலை வீழ்ச்சியினையும், பாதிப்பினையும் அடைந்துள்ளது.

மரக்கறி செடிகளுக்கு உரம், கிருமி நாசினிகள் போன்றவற்றை தெளிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.

அத்துடன் மரக்கறிகளின் விலைகளிலும் பாரிய வீழ்ச்சி ஏற்ப்ட்டுள்ளது.  நுவரெலியாவின் பம்பரக்கலை மற்றும் நுவரெலியாவினை சுற்றி காணப்படும் பல பிரதேசங்கள் மழை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நுவரெலியா தொடக்கம் கண்டி மற்றும் நுவரெலிய தொடக்கம் பதுளை போன்றவற்றின் பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்த நிலையிலும், சரியும் நிலையிலும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE