விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் இந்திய ஒருநாள் போட்டி தலைவர் டோனியின் மோசமான ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் களமிறங்க காத்திருக்கும் டோனி பயிற்சி களமாக உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடரில் ஜார்கண்ட் அணிக்காக ஆடி வருகிறார்.
அவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட எடுக்கவில்லை.
கேரளா அணியுடனான போட்டியில் 20 வயதேயான இளம் பந்து வீச்சாளர் பபித் அகமது என்ற சுழற்பந்துவீச்சாளரிடம் ஆட்டமிழந்தார்.
நேற்று நடந்த போட்டியில் டோனி துடுப்பெடுத்தாடாமலே ஜார்கண்ட் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹரியானாவை வீழ்த்தியது.
தற்போது கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய டோனி கருண் நாயர் பந்தில் வெறும் 1 ஓட்டம் எடுத்த நிலையில் பவுல்ட் ஆகி வெளியேறினார்.
டோனி முதல் போட்டியில் 9 ஓட்டங்கள், 2வது போட்டியில் 44 ஓட்டங்கள் எடுத்தார். 3வது போட்டியில் 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.
நேற்று நடந்த ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பே வரவில்லை. தற்போது இன்றைய போட்டியில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்துள்ளார்.