தொடரூந்து பணியாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலான பேச்சு வார்த்தை இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

132

 

தொடரூந்து பணியாளர்களின் வேதனம் பிரச்சினை தொடர்பில் தொடரூந்து தொழிற்சங்க ஒன்றியம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று முற்பகல் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தொடரூந்து நிலை பொறுப்பதிகாரிகள், கட்டுப்பாட்டாளர்கள், இயந்திர சாரதிகள் உள்ளிட்ட பல தொழிற்சங்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டாளர்களின் சங்கத்தின் தலைவர் லால் ஆரியரத்ன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

கடந்த 18ஆம் திகதியும் தொடரூந்து தொழிற்சங்கங்கள் ஜனாதிபதியுடன் பேச்சு வார்தையில் ஈடுபட்டன.

அதன்போது அடுத்த கட்ட பேச்சு வார்த்தையை இன்றைய தினம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தொடரூந்து பயணக் கட்டணத் சீர் திருத்தத்தை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி வெளியிடுவதற்கான அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது. தொடரூந்து கட்டண சீர்திருத்தத்திற்கு அமைய, குறைந்த கட்டணமாக உள்ள 10 ரூபாவில் எந்தவிதமாற்றங்களும் மேற்கொள்ளப்படாது.

எனினும், குறைந்த கட்டணத்தில் பயணிக்கக்கூடிய 10 கிலோமீற்றர் தூரம் 7 கிலோமீற்றராக குறைக்கப்பட்டும் எனவும் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE