தொடர்கதையாகும் கச்சதீவு பிரச்சினை – தீர்வு எட்டப்பட வாய்ப்பில்லை

531

கச்சதீவு என்பது இலங்கை மீனவர்களுக்கும், இந்தியாவின் தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் பல ஆண்டுகாலமாக இருந்துவரும் பிரச்சினை தான். இந்தப் பிரச்சினையானது இருநாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். ஒரு நாட்டுக்கு சாதகமாக இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டால் இரு நாடுகளுக்கும் பாதகமாகவே அமையும். 3ஃ4 முஆ மீற்றர் சுற்றளவு கொண்ட இந்த கச்சதீவு என்னும் மண் திடல் இருநாட்டு மீனவர்களுக்கும் ஒரு பிரச்சினை இல்லை. மாறாக மீன்பிடிக்கும் உரிமை யாருக்கு இருக்கிறது என்பதுதான் பிரச்சினை.

1970ஆம் ஆண்டு அளவில் இந்திரா காந்தி இந்திய பிரதமராகவும், சிறி மாவோ பண்டாரநாயக்க இலங்கை பிர தமராக இருந்த காலகட்டத்தில் இன்று நிலவுகின்ற சூழ்நிலை அன்றும் நிலவியது. இலங்கை பத்திரிகைகளில் முன்பக்க செய்தியாக காணமுடிந்தது. இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையானது அன்றும் இன்றும் அவர்களுக்கு சார்பானதாக இருக்கும். அந்த கொள்கை அடிப்படையில் தான் ஒன்றை அண்டை நாடுகளுக்கு சாதகமாக கொடுத்து, 10 நன்மைகளை அந்த நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை அரசாங்கம் சீன நாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. இவர்களின் (சீன,இலங்கை) உறவு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக தான் இந்திய பிரதமமந்திரி இந்திரா காந்தி அவர்கள் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களுக்கு 1974ம் ஆண்டு நல்லிணக்க புரிந்துணர்வுடன் கடிதம் மூலமாக இலங்கைக்கு கச்சதீவை கொடுத்தார் என்பது உண்மை. ஆனால் இது இரு நாட்டுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தம் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சீன இலங்கை உறவு எப்படி?
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததோ அதே நிலை இன்று இந்த கச்சதீவு என்கிற மண்திட்டி இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. அது என்னவெனில் 40 வருடங்களுக்கு பின் இலங்கை சீன உறவானது தமிழ் நாட்டையும், தமிழக மீனவர்களையும் அதிகமாக பாதிக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அத னால் தான் கச்சதீவும் தமிழ் நாட்டின் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையும் ஒன்று சேர்த்து மிக பெரிய பிரச்சினையாக்கி எப்படியாவது கச்சதீவை திரும்பப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு செயற்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதனால் பாதிக்கப்படுவது இருநாட்டு தமிழ் மீனவ சமுதாயம் தான்.
இரு நாட்டு உறவுக்கும் அச்சுறுத்தலாய் இருக்கும் இந்த கச்சதீவு யாருக்குச ;சொந்தமானது? தமிழ் நாட்டு அரசாங்கமும், தமிழ்நாட்டு மீனவ சங்க பேரவையும் கச்சதீவு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த 21 ஆதாரங்களை தாம் வைத்திருப்பதாக கூறிக்கொள்கின்றன. அதில் ஒன்று இந்த கச்சதீவானது இராமநாதபுரம் அரசால் இங்கிலாந்து நாட்டு தேசாதிபதிகளுக்கு குத்தகைக்கு கொடுத்த படிவம், அதற்கான குத்தகை பணம் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச் சீட்டுக்கள், இப்படி அனேகமான தங்களுக்குச் சார்பான சாட்சியங்கள் சிலவற்றை கொண்டிருக்கிறார்கள். இந்த கச்சதீவு இராமநாதபுரத்து ராஜாவுக்கு சொந்தமானது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் ராஜசேதுபதி அவர்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அதற்கான குத்தகை பணம் அறவிட்டதற்கான பற்றுச்சீட்டுக்கள் இருக்கின்றன. மேலும் பலருக்கு வணிக ரீதி யில் குத்தகைக்கு கொடுக்கப்பட்டதற்கான சாட்சியங்கள், மேலும் பல ஆவணங்கள் தம்மிடம் இருப்பதாக கருணா நிதி கூறியுள்ளார். இராமநாதபுரம் மன்னர்களுக்கு இலங்கை தேசாதிபதிகள் பலர் கச்சதீவையும், அதன் அண்டிய கடல் பகுதிகளை குத்தகைக்கு எடுப்பதற்காக 1450-1650களில் எழுதிய கடிதங்களும் ஆதாரமாக வைத்துள்ளார்கள் என அறிய முடிகிறது. மேலும் இந்தியாவிலுள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கச்சதீவுக்கானஒப்பந்தத்தின் படிவத்தை கேட்டபொழுது, அதிகாரிகள் அவ்வாறான ஒப்பந்தங்கள் செய்துகொள்ளவே இல்லை என்று பதில் அளித்திருக்கிறார்கள். இன்னும் கூறப்போனால் மன்னர் சேதுபதி யின் வாரிசில் வந்த ஒருவர் இந்திய தமிழ் திரைப்படத்தில் நடித்துக்கொண்டும் இருக்கிறார் என்பதும் உண்மை.

இப்படி பல ஆவணங்கள் தமிழக அரசிடம் உண்டு. கச்சதீவு என்பது ஒரு மண்திட்டு. இந்திய கடல் பகுதிகளிலிருந்து நீர்; ஓட்டம் பாக்ஜன சந்தி என அழைக்கப்படுகிற பகுதியை நோக்கி இருப்பதால் மண் அறிக்கப்பட்டு இப்படியான மண் திட்டுகள் உருவாகின்றன. கச்சதீவு போன்ற இன்னும் பல மண் திடல்கள் கச்சதீவுக்கு அருகாமையில் இருக்கின்றன. உண்மையை கூறினால் இது இராமநாதபுரம் மன்னர் பரம்பரைக்கு சொந்தமானது தான் என்று புலப்படும். தமிழ் நாட்டில் பல ஆதாரங்களும் பல பாரம்பரிய கதைகளும் இந்த கச்சதீவுக்கு உண்டு. எவ்வாறெனில் இன்றைய தமிழகத்தையும் இலங்கையையும் இணைத்திருந்த குமரிகண்டம் என்ற இடம்தான் தமிழர்களின் பூர்வீக தேசம் என்றும் அது பல ஆயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் கடல் கொந்தளிப்பினால் கடலில் மூழ்கிவிட்டதாகவும், அதுவே படிப்படியாக மேலே வருவதாகவும் கூறுகிறார்கள்.
கச்சதீவு விடயத்தில் தமி ழகமும், இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் கச்சதீவு எங்களுக்குச் சொந்தமானது என்று கூறும் நிலை யில் இலங்கை அரசாங்கம் கச்சதீவு விடயத்தில் எந்த ஆதாரத்தை கொண்டி ருப்பதாகத் தெரியவில்லை. இந்திரா காந்தி – சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு கொடுத்த கடிதத்தை விட, அந்த கடிதத்தில் கச்சதீவு இலங்கைக்கு கொடுப்பதாகவும் ஆனால் மீனவர்கள் வலைகளை காயப்போடுவதற்கும், ஓய்வு எடுத்துக்கொள்வதற்கும் இந்திய மீனவர்களுக்கு உரிமை உண்டு என்று எழுதப்பட்டிருப்பதாக அறியமுடி கிறது. இந்த கடிதம் 1974ம் ஆண்டு எழுதப்பட்டது. பாராளுமன்றத்தில் இந்திராகாந்தி இதை கூறியபொழுது உள்விவகார அமைச்சராக இருந்த சுரண்சிங் என்பவர் இந்திய மீனவர்களுக்கு மீன் பிடிக்க உரிமையுண்டு என்று கூறிய தாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றார்கள். அதன் பின் 1975ஆம் ஆண்டு கடல் எல்லை பிரிக்கப்பட்டபொழுது கச்சதீவு இலங்கைக்குள் வந்துவிட்டது என்பது இலங்கையை பொறுத்தவரையில் மிக பெரிய ஆவணமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டவேண்டும். ஆகவே இன்று கச்சதீவானது இலங்கையின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
1976 ஆம் ஆண்டும் இந்தியா அதை உறுதிப்படுத்துமாப்போல் இன்னும் ஒரு கடிதம் இந்திராகாந்தியின் ஒப்பமிட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இதை அன்றைய ஜனசங்கம் இன்றைய (பாரதீய ஜனதாக் கட்சி) தலைவராக இருந்த வாஜ்பாய் அவர்கள் எதிர்த்ததாகவும், அந்த கடிதத்தின் கைபிரதிகளை ஜனசங்க கட்சியினர் கிழித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கடிதத்தின் படி இலங்கை மீனவர்கள் கச்சதீவுக்கு அப்பால் மேற்கு திசையில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டது. அதேபோல் இந்திய மீனவர்கள் கச்சதீவுக்கு கிழக்காக மீன் பிடிப்பது தடைசெய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது. வெறும் அறிக்கைகளினால் கச்சதீவை மீளப்பெற்றுக் கொள்ளமுடியாது என்று நினைத்த மீனவ சங்க தலைவர் பீட்டர்ராயன் என்பவர் 01.01.2014ம் ஆண்டு நீதிமன்றத்pல் வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதன்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசாங்கத்துடன் பதில் மனு தாக்கல் செய்யும் படி கூறியது. அதன் பிரகாரம் மத்திய அரசாங்கம் (காங்கிரஸ் கட்சி) இது முடிந்து போன விவகாரம். கச்சதீவு இலங்கைக்கு 1774ஆம் ஆண்டு வழங்கப்பட்டுவிட்டது என்ற பதில் மனு தாக்குதல் செய்தது.
மேலும் கடந்த மாதம் இன்றைய மோடி அரசாங்கம் இன்னும் மேலதிக மனுவையும் தாக்கல் செய்துள்ளது. மேலதிக மனுவில் இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன் பிடிக்க உரிமை இல்லை என்று கூறியுள்ளது. இது விடயமாக தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. இது இப்படி இருக்க, பாரதீய ஜனதாக் கட்சியின் தமி ழக தலைவர்கள் கச்சதீவையும் மீட்போம், மீனவர் பிரச்சினையையும் தீர்ப்போம் என்று பகிரங்கமாக கூறிவருகிறார்கள். பீட்டர்ராயன் தொடுத்தவழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை. விசாரணைக்கு வரும்போது சாட்சிகள் மாற வாய்ப்புண்டு.
காரணம் என்னவென்றால் இந்தியாவின் எந்த பகுதியையும் ஒரு நாட்டுக்கு கொடுக்கவேண்டும் என்றால் சட்டத்தில் திருத்தம் செய்து அதை பாராளுமன்றத்தில் 3ஃ2 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிய பின் தான் அதை செய்யமுடியும். கச்சதீவு விடயத்தில் இந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை என்பதையும் ஒரு பிரதம மந்திரியின் கட்டளைப்படி எந்த பகுதியையும் வேறு நாட்டுக்கு கொடுக்கமுடியாது என்று இந்தியாவின் சட்டம் கூறுகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ளமுடியும். மீன்பிடி விவகாரத்தை எடுத்துக்கொண்டால், இந்திய மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மாத்திரம் மீன்பிடிப்பதில்லை. மாறாக இலங்கை கடற்கரைகளில் இருந்து 2முஅ மீற்றர் வரை வந்து மீன் பிடிப்பார்கள். இவர்கள் மீன்பிடிப்பதை மாதகல், சேந்தான்குளம், வளிதூண்டல், கீரி மலை, மயிலிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறையை அண்டிய கடற்பகுதிகளில் இருந்துபார்த்தால் காணலாம். கடலில் ஒரு திருவிழா நடப்பதுபோல் இருக்கும். இரவில் லைட் போட்டு மீன் பிடிப்பது ஒரு திருவிழாதான்.

இந்திய அரசாங்கம் இப்படியான அத்துமீறலை அனுமதிப்பதும், பின் இலங்கை அரசாங்கத்தினை குற்றம் சாட்டுவதும், மீனவர்கள் பிடிபடுவதும், பின் விடுதலையாவதும் நிச்சயமாக இது அரசியல் சதுரங்கம்தான் என்பதை எவரும் புரிந்துகொள்வார்கள். இது இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களின் அரசியல் இராஜதந்திர விளையாட்டு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் இரு நாட்டு மீனவர் சமூகத்தை பொறுத்தவரையில், இது வாழ்வாதார பிரச்சினை. இராமநாதபுர மாவட்டத்திலுள்ள 18ஆயிரம் மீனவ குடும்பங்கள் இந்த பாக்ஜல சந்தி பகுதி யில் மீன் பிடிப்பதனூடாகவே தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள். அதே போல் இலங்கை வடபகுதியை தாயகமாக கொண்ட பல இலட்சம் மீனவர்கள் இந்த கடல் பகுதியில் தான் மீன்பிடித்து உயிர் வாழ்கிறார்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த விடயத்தில் வட பகுதி மீனவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அநேக சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் மீன் பிடிப்பதற்கு செல்லவேண்டும். இவர்களை குறித்து இலங்கை அரசாங்கம் எந்த கரிசணையும் காட்டுவதாக தெரியவில்லை. ஏன் வடமாகாண அரசு இவர்களுக்கு உதவும் நிலையில் இல்லை. மீன்பிடி பிரச்சினையை தீர்ப்பதற்காக வடபகுதி மீனவர்களும், இந்திய மீனவர்களும் ஒருமுறை இந்தியாவிலும், மறுமுறை இலங்கையிலும் ஆக இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டவில்லை. இந்திய மீனவர் சார்பாக வந்த ஒருவர் இவ்வாறு கூறினார். அவர்கள் பகுதியில் மீன்கள் இல்லாத காரணத்தால்தான் நாம் இங்கு வந்து மீன்பிடிப்பதாக கூறினார். இவர்களுடைய பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இவருடைய வீட்டில் உணவு இல்லை என்றால் பக்கத்து வீட்டுக்கு சென்று அனுமதி இல்லாமல் உணவை எடுத்துக் கொள்வார் போல் தோன்றுகிறது இவரின் பதில்.
நம் நாட்டு மீனவர்களுக்கு இன்னும் ஒரு பிரச்சினையும் உண்டு. நன்றி உணர்வோடுதான் வடபகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களை பார்ப்பார்கள். ஆபத்தான காலகட்டங்களில் உதவியவர்களும், கரை சேர்த்தவர்களும், ஆதரவு காட்டியவர்களும், இவர்களுக்காக குரல் கொடுத்தவர்களும் இவர்கள்தான். இன்றும் இங்கு வாழ் தமிழர்களுக்கு பரிந்து பேசுபவர்களும் தமிழ்நாட்டு தமிழ் மக்கள்தான். இந்நிலையில் வடபகுதி மீனவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது தான். உறவுகள் கைகொடுக்கப் போகிறீர்களா?
இல்லை பகைத்துக் கொள்ளப்போகிறீர்களா? இந்திய கடல் எல்லைகளில் மீன் இல்லாமல் போவதற்கு காரணம் அவர்கள் மீன் பிடிப்பதற்கு பாவிக்கும் வலைகளும், மீன்பிடிக்க பாவிக்கும் உபகரணங்களும் தான். ஆகவே தடைசெய்யப்பட்ட வலை களையும், உபகரணங்களையும் தவிர்த்துக்கொண்டால் மீன் உற்பத்தியாவதற்கு எந்த தடையும் இல்லை. இந்திய கடல் எல்லைக்குள்ளும் மீன் கிடைக்கும். மீனவர் பிரச்சினை தீர்ப்பதற்கு ஒரு புதிய திட்டத்தை இந்திய அரசாங்கம் இலங்கையிடம் சமர்ப்பிக்கப்போகிறது. அது என்னவென்றால் வர்த்தகரீதியில் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க அனுமதி கோருவது. தமிழக மீனவர்கள் இலங்கை அரசாங்கத்திடம் பணம் செலுத்துவது இலங்கைக்கு ஆதாயம் தான். எப்படி என்றால் அனுமதி வழங்குவதற்கு பணம் கிடைக்கும்.

கச்சதீவு இலங்கைக்குரியது என்று சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு விடும். தமிழகத்தை பொறுத்தமட்டில் அரசியல்கட்சிகள் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும். தமிழகத்தின் உரி மையை தமிழகம் விட்டுக்கொடுக்காது. இந்தியாவை பொறுத்தமட்டில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குவது போல் இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் அனு மதி வழங்கினால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. வடபகுதியை எடுத்துக்கொண்டால் கடத்தல், போதை பொருள் விற்பனையின் முக்கிய இடத்தை பிடித்துவிடும். ஏன் என்றால் இந்திய மீனவர்கள் மீனை மாத்திரம் பிடிக்க மாட்டார்கள். போதை பொருள் கடத்தலிலும் மன்னர்கள்தான். வடபகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வடபகுதி வாலிபர்கள் மாத்திரம் அல்ல. வடபகுதி மீனவர் சமுதாயமும் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். காலபோக்கில் மீனவர்கள் வேறு வேலை தேடவேண்டிய நிலை ஏற்படும். என்பதை புரிந்துகொண்டு, இந்தியாவின் திட்டத்தை எதிர்க்க வேண்டும். வடபகுதி அரசியல்வாதிகள், சமூக நலன்விரும்பிகள் இதைச் செய்வார்களா?

– பெர்ணான்டோ –

 

SHARE