மன்னார் நகர் நிருபர்
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அகழ்வு பணிகள் இன்று (4) புதன்கிழமை 27 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில் இடமாற்றம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளுக்கு விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமை தாங்கிவருகின்றார் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டு அகழ்வு மேற்கொண்டபோது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.





அப்புறப்படுத்தல் பணிகளை அறிக்கையிட செல்லும் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக அங்கு பணியாற்றும் உத்தியோகத்தர்களால் இடையூறு விளைவிக்கப்படுகின்றது
குறித்த அகழ்வு பணிகளை ஓளிப்பதிவு செய்யவும் தகவல் சேகரிக்கவும் ஊடகவியளாலர்களுக்கு தினமும் காலை 10.30 இல் இருந்து 11.00 மணிவரைக்கும் அத்துடன் மதியம் 3.00 இல் இருந்து 3.30 வரை நேரம் ஒதுக்கப்பட்ட போதும் குறித்த நேரத்தில் செய்தி சேகரிக் சென்றாலும் செய்திகளை சேகரிப்பதற்கு இடையூறாக பொறுப்பான அதிகரிகள் செயற்படுகின்றனர்
இன்று செய்தி சேகரிக்க ஊடகவியளாலர்கள் சென்ற நிலையில் செய்தி சேகரிப்பதற்து இடையூறாக அதிகாரிகள் செயற்பட்டதை தொடர்ந்து வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டபோது குறித்த அகழ்வுபணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களை அச்சுருத்தும் விதமாக புகைபடம் எடுத்தமை குறிப்பிடதக்கது