தொடர்ச்சியாக நான்காவது வெற்றி! அசத்திய திண்டுக்கல்

233

 

தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

நெல்லையில் நேற்று நடைபெற்ற 13-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி அணி, 20 ஓவரில் 120 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக அந்த அணியின் கவுசிக் காந்தி 35 ஓட்டங்கள் எடுத்தார்.

121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியும் 20 ஓவரில் 120 ஓட்டங்கள் எடுக்கவே போட்டி சமமானது.

தொடர்ந்து சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் மோதின, இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சூப்பர் ஓவரில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தூத்துக்குடியை அணியை வீழ்த்தியது.

திண்டுக்கல் அணியில் அரைசதம் அடித்த முருகன் அஸ்வின் ஆட்டநாயகனாக தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் அணி தொடர்ந்து 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE