தொடர்ச்சியாக மீட்க்கப்படும்  மனித எச்சங்கள்

167
மன்னார் நகர் நிருபர்
மன்னார் சதோச வளாகத்தில் தொடர்சியாக சந்தோகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது. குறித்த வளாகத்தில் இன்றுடன் 59 வது தடவையாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றன.
விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை போராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. இன்று அகழ்வு பணிக்காக மேலதிக அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை குறித்த வளாகத்தில் 102 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 95 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலதிகமாக காணப்படும் 7 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று இடம் பெறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் காணப்படுகின்றது.
இதுவரை அப்புறப்படுத்தப்பட்ட  மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலேயே சுத்தப்படுத்தப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு வரையப்பட்டு பொதி செய்யப்பட்டுகின்றது. குறித்த மனித புதை குழி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்வதற்காக உயர்மட்ட கலந்துரையாடல் ஓன்று இவ்வார இறுதிக்குள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது குறிப்பிடதக்கது.
SHARE