தொடர்ந்து நெட்டிசன்களிடம் சிக்கி தவிக்கும் பிரபல நடிகை..!

193

சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்திற்காக கீர்த்தி சுரேஷ் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

நாக் அஷ்வின் இயக்கி வரும் மகாநதி படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் துவங்கியது. கீர்த்தியின் சாவித்ரி புகைப்படம் வெளியானது.

சாவித்ரி தனது சினிமாத்துறையில் உச்சத்தில் இருந்தபோது உடல் பிரச்சினை ஏற்பட்டு குண்டானார். இருப்பினும் ரசிகர்களுக்கு அவரை பிடித்திருந்தது. இந்நிலையில் கீர்த்தியை உடல் எடையை அதிகரிக்குமாறு இயக்குனர் தெரிவித்துள்ளாராம்.

மகாநதி படத்தில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனாக நடிக்கிறார். இந்த படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நம்புகிறார் நாக் அஷ்வின்.

கீர்த்தி ஏற்கனவே குண்டாக இருப்பதாக நெட்டிசன்கள் மரணக் கலாய் கலாய்த்துக் கொண்டிருக்கும்  நிலையில் அவரை குண்டாகுமாறு அஷ்வின் கூறியுள்ளது, இணையவாசிகளுக்கு பழைய சோறு கேட்டவனுக்கு பிரியாணி கிடைத்தது போல் மீண்டும் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்

– See more at: http://www.manithan.com/news/20170616127753#sthash.3ikZtb3h.dpuf

SHARE