சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கன தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய அணிவீரரான அஸ்வின் 419 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார், இவரது டெஸ்ட் சராசரி 31.68 ஆகும்.
வங்கதேச வீரர் சகீப்– அல்–ஹசன் 2–வது இடத்திலும், பிராட்(இங்கிலாந்து) 3–வது இடத்திலும், பிலாண்டர்(தென் ஆப்பிரிக்கா) 4–வது இடத்திலும் உள்ளனர்.
ஸ்டார்க்(அவுஸ்திரேலியா), முகமது ஹபீஸ்(பாகிஸ்தான்), மொய்ன் அலி(இங்கிலாந்து), ஸ்டெய்ன்(தென் ஆப்பிரிக்கா), மேத்யூஸ்(இலங்கை) ஆகியோர் 6 முதல் 10–வது இடங்களில் உள்ளனர்.