வட்டாரத் தேர்தலையும் தாண்டி, தமிழ் இனத்திற்கான தேர்தலாக இத்தேர்தலை கருதவேண்டும்!
Thinappuyal News -0
அபு அலா, மட்டு.துஷாரா
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைக்கப்பெறுவதற்கான ஆணையை எமது மாவட்ட மக்கள் வழங்கினார்கள். அதன் மூலம் எமது மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான வழி வகைகளை எமது கட்சியும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றதென மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
அதேபோன்று எமது மட்டு.மாநகர சபைக்குட்பட்ட மக்களின் தேவைகளையும், குறைபாடுகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்றெண்ணி,...
”தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன்
Thinappuyal News -
”தமிழரசுக் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டுமாக இருந்தால் அலிபாவாவும் 19 திருடர்களும் விலக வேண்டும்” என தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (27.04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று தமிழினம் பாரிய ஆயுதப் போராட்டத்தின் பின் யாரும் பொறுப்பெடுக்க முடியாத நிலையில் விடப்பட்டுள்ளது. உண்மையில் தமிழரசுக் கட்சி...
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்
Thinappuyal News -
தமிழரசுக் கட்சியுடன் இணைந்து செயல்பட நாங்கள் முயற்சித்தோம் : கலையரசன் தடையாக இருந்தார்.- வீரமுனை பிரச்சினையில் நிஸாம் காரியப்பரை நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்றேன் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
சம்மாந்துறை பிரதேச சபையின் எல்லைகள் பிரித்தது நிறைய பிரச்சினைகளை கொண்டது. அவற்றில் வீரமுனை வட்டாரம் நிறைய பிரச்சினைகளை கொண்டது. அவற்றுக்கு தீர்வு காணும் மாற்று வழியாக நடைபெறும் சம்மாந்துறை பிரதேச சபை தேர்தலில் தமிழரசு...
இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !
மக்களின் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தலவாக்கலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இனவாதத்துக்கு இடமளிக்கும் எந்த முயற்சியையும் அரசாங்கம் பொறுக்காது என்றும், சட்டத் திருத்தங்கள் தேவையாக இருந்தாலும் அதை மேற்கொண்டு இனவாதத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மலையக...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளூராட்சி சபைகளில் 150 ஆசனங்களை கைப்பற்றும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை !
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
வடபுல மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மீது கொண்ட நம்பிக்கையும், தலைவர் றிசாட் எம் மக்கள் மீது கொண்டுள்ள பற்றையும் சகித்துக் கொள்ள முடியாத நாசகார கூட்டம் ஓடோடி திரிவதாகவும், இவர்களது இந்த செயற்பாடுகளுக்கு எமது மக்கள் தகுந்த பதிலடி எதிர்வரும் தேர்தலில் வழங்குவார்கள் என்று மன்னாரைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளர், தொழிலதிபருமான முஹம்மட் ரிஷான் ஷேக் அமானி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்...
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் ஆத்மா இறைவனின் இல்லத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.
Thinappuyal News -
இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு தீமையை அகற்றி அனைத்து நன்மைகளுக்காகவும் செயற்படுமாறு காட்டினார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து காட்டிய பாதையை நன்கு உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கிய தலைமைத்துவம் கத்தோலிக்க சமூகத்திற்கு மட்டுமல்லாது, உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கியது. அவருடைய மறைவு நல்லுலகை விரும்புபவர்களுக்கு பெரும் இழப்பாகும். அவருடைய எளிமையான வாழ்க்கை காட்டிய பாதையை நன்கு அறிந்துகொள்வதே அவருக்கு செய்யக்கூடிய உண்மையான...
அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம்
Thinappuyal News -
அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம்
அரசியல் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தற்போது சுமார் 50 முறைப்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், மிகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச உத்தியோகத்தர்களை தொடர்புபடுத்தியவை எனவும், அதில் அரசின் மூத்த அதிகாரிகள் சிலருக்கு...
ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடி நகரம் மாற்றப்படும்-கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
Thinappuyal News -
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மு.கா உயர்பீட உறுப்பினர் ராஸிக் அவர்களின் தலைமையில் காத்தான்குடி அல்-அக்ஸா சதுக்கத்தில் நேற்று (19) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
அவர் இதன்போது கருத்துத்தெரிவிக்கையில்,
கடந்த பாராளுமன்ற தேர்தலில் எதையெல்லாம் நாங்கள் பேசினோமோ...
1971 சேகுவேரா போராட்டத்தின் போதும் அதன் தொடர்ச்சியாக 1989 வரையில் மலையக தமிழ் தோழர்கள், சிங்கள தோழர்கள் உட்பட 152000 மேற்பட்டவர்கள் பலியாகியும், பல லட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டும். உலக வரலாற்றில் ஹிட்லருக்கு பின் படுமோசமான சித்திரவதைகள் செய்யப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.
இந்த ஆட்சியாளர்களினால் செய்யப்பட்ட படு கொலைகளின் விபரம்.! இதில் தமிழ் இனப்படுகொலை 242 இடங்களில் நடத்தப்பட்டது
இது தொடர்பில் தினப்புயல்
ஊடக நிறுவனம் ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிருந்தது என்பது...
மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும்.ஜனாதிபதி
Thinappuyal News -
மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த...