வாரணாசி உள்பட 41 தொகுதிகளில் நாளை இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 12-ந் திகதி வரை 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 9-வது இறுதிக்கட்டமாக நாளை 3 மாநிலங்களில் உள்ள 41 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது உத்தர பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்காளத்தில் 17...
ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்டில் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றின் முதல் அரை இறுதிப் போட்டி நேற்று அங்கு நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான ரபேல் நடாலும் சக நாட்டவரான ரொபர்டோ பாடிஸ்டா அகட்டும் மோதினர். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வென்று ரபேல் நடால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். ஒரு மணி 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில்...
இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் ஜூலை மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய எதிர்க்கட்சியான இந்தோனேஷிய ஜனநாயக கட்சி சார்பில் ஜகார்த்தா மாநில கவர்னர் ஜோகோ ஜோகோவி விடோடோ என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மாதம் நடந்த முதல்சுற்று தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அப்போது இந்தோனேஷிய ஜனநாயக கட்சிக்கு 18.9 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றில் போட்டியிடவேண்டும் என்றால் குறைந்த பட்சம் 25 சதவீத...
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 25வது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கான விசாரணைப் பொறிமுறையை இன்னமும் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் உருவாக்கவில்லை. இது ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வந்த நாடுகள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கவலை தமிழர்...
சர்வதேச தலசீமியா தினத்தையொட்டி கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அனுசரணையுடன் தலசீமியா நோய் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் நேற்று இடம்பெற்றது. வேகமாக மக்களை ஆட்கொண்டுவரும் தலசீமியா நோயில் இருந்து மக்களை விழிப்படைய செய்யும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி. எஸ். எம். சாள்ஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்காட்சியை ...
உலக சூதாட்ட நிறுவன ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் ஜெம்ஸ் பெக்கர் இலங்கையில் கொள்வனவு செய்த காணிக்கு 20 வீதமான பணத்தை மட்டுமே செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டு 10 வீதமான பணத்தையும், அதன் பின்னர் அண்மையில் 10 வீதமான பணத்தையும் மட்டுமே செலுத்தியுள்ளார். டி.ஆh. விஜேவர்தன மற்றும் சிற்றம்பலம் ஆகிய வீதிகளுக்கு இடையில் இந்தக் காணி அமைந்துள்ளது. இந்தக் காணியின் விலை 2.4 பில்லியன் ரூபா என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 20 வீதமான பணத்தை...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிட்டனர். வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்களுக்கான தூதுவர்கள், செயலாளர்கள், இராஜதந்திரிகள் அடங்கிய 11 பேர் கொண்ட குழு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தது. இதில் நான்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட 4 இராஜதந்திரிகள் அடங்குகின்றனர். இந்தக் குழுவில், சவூதி அரேபியாவுக்கான தூதுவர்...
தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும், தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக சென்ற அவர்களில் மூன்று ஆண்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள். அவர்களுக்கு முன்னதாகவே இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்திருந்தது. அதன் பின்னரும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளார்கள்...
இலங்கைக்கும் - பாகிஸ்தானுக்கும் இடையில் இடம்பெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தை தொடர்பில் இந்தியா அதிருப்தி கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜாகீர் உசேன் கைது செய்யப்பட்டதன் பின்னர், பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் இடையிலான தொடர்பு குறித்த இந்தியாவின் சந்தேகம் வலுத்திருந்தது. இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானிய தீவிரவாத மற்றும் புலனாய்வு செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த...
லோக்சபா தேர்தல் முடிவுகள், அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், தற்போதைய 15வது லோக்சபாவை கலைப்பதற்கான, ஜனாதிபதியின் உத்தரவு, இம்மாதம், 18ல் வெளியாகலாம். புதிய, 16வது லோக்சபாவை அமைக்க, வரும் ஜூன் 2ல், பார்லிமென்ட் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.   மிகப்பெரிய பணிகள் லோக்சபா தேர்தல் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும், 16ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அன்று மாலையே, அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்ற கேள்விக்கான தெளிவான...