ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 32 ஆவது லீக் ஆட்டம் இன்று தில்லியில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் ஐதராபாத்- டெல்லி அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்த பிரிவினைவாதிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மற்றும் உக்ரைன் அரசு விடுத்த கோரிக்கையை கிளர்ச்சியாளர்கள் நிராகரித்த நிலையில், தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று...
சர்வதேச விசாரணையை தவிர ஐ,நா.சபையின் மற்ற தீர்மானங்களை நிறைவேற்ற தயார் என்று  இலங்கை அதிபார் ராஜபட்ச அறிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த மனித உரிமை மீறல்  குற்றச்சாட்டு தொடர்பாக ஐ.நா. மனித உரிமகள் ஆணையம் சர்வதேச விசாணைக்கு பரிந்துரைத்தது. இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு துணை அமைச்சர் செய்கி கிஹாராவுடன் இலங்கை அதிபர் ராஜபட்ச சந்தித்து பேசினார். அப்போது...
பிரான்ஸில் நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் ரஷிய அதிபரை  சந்திக்கும் திட்டம் இல்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறியதாவது: பிரான்ஸில் அடுத்த மாதம் 6ஆம் தேதி நடைபெறும் 70ஆவது படைவீரர்கள் நினைவு தினத்தில் கலந்துகொள்ளும் அதிபர் ஒபாமா, உலகத் தலைவர்கள் யாரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. இரண்டாம் உலகப்போரில் வெற்றியைத் தேடித்தந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த,...
  இலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்த உயர்மட்டக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். நாட்டில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், படையினர், தீவிரமான விழிப்பு நிலையில் வைக்கப்பட்டிருப்பர் என்றும் அவர் கூறினார். படையினர் தற்போது, அபிவிருத்தி மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்....
தமிழில் தாம்தூம் படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத் இப்போது இந்தியில் பிசியான நடிகை. அவ்வப்போது எதையாவது சொல்லியோ, செய்தோ பரபரப்பை கிளப்புகிறவர். அவரது லேட்டஸ்ட் பரபரப்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு அவர் கொடுத்துள்ள ஆபாச போஸ்கள்.                டூ பீஸ் உடையில் சிகரெட்டை ஊதி தள்ளுவது போன்றும், மது அருந்துவது போன்றும் அவர் கொடுத்துள்ள போஸ்களால் பத்திரிகை மளமளவென்று ஒரு புறம்...
மாடல்கள், டான்சர்கள், அழகி போட்டியில் வென்றவர்கள்தான் சினிமாவுக்கு வந்து கொண்டிருந்தார்கள். இப்போது விமான பணிப்பெண்கள், டாக்டர்கள், மாணவிகள், இளம் தொழிலதிபர்கள் என பல்வேறு துறைகளிலிருந்தும் நடிக்க வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் வித்யாவும் நடிகையாகி விட்டார். விஜய் இயக்கியுள்ள சைவம் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நடிக்க வந்தது பற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் ஸ்டெம்செல் விஞ்ஞானியாக இருந்தாலும் அடிப்படையில்...
உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை பிற உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது அந்நாட்டின் இறையாண்மையையும், மக்களின் சுதந்திர உரிமைகளையும் பாதிக்கும் செயலாக எதிர்ப்பைப் பெற்றுள்ளது. இதற்கு தங்களுடைய ஆட்சேபணையைத் தெரிவிக்கும் விதமாக உலகநாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இருப்பினும், ஐரோப்பிய நாடுகளின் எரிவாயுத் தேவைகளில் 30 சதவிகிதத்தையும், உக்ரைனுக்கான 50 சதவிகிதத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் ரஷ்யா இவற்றை நிறுத்திவிடுவதான...
  ஜப்பானின் அகாசகா மாவட்டத்தில் உள்ள ஜப்பானிய பாணி உணவகம் ஒன்று வழுக்கைத் தலையர்களுக்கு மற்றவர்களுக்கு இல்லாத சிறப்புத் தள்ளுபடியை அளித்து வருகின்றது. தலை வழுக்கையாவது என்பது மேற்கத்திய நாடுகள் அளவிற்கு ஜப்பானில் காணப்படாவிட்டாலும் 26 சதவிகித மக்கள் அங்கும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றார்கள் என்று அந்நாட்டின் முன்னனி சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான அடேரன்ஸ் குறிப்பிடுகின்றார்.இந்த மாற்றத்தில் மரபியல் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்போதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை...
மோடி, கெஜ்ரிவால் போட்டியிடும் வாரணாசி உள்பட 41 தொகுதிகளிலும் கடந்த ஒரு மாதமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. இந்த 41 தொகுதிகளில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க. தலைவர்கள் 41 தொகுதிகளிலும் முற்றுகையிட்டது குறிப்பிடத்தக்கது. 41 தொகுதிகளுக்கும் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது. இன்றிரவு முதல் நாளை முழுவதும் பூத் சிலிப் கொடுக்கும் பணி நடைபெறும். 12–ந்தேதி காலை...