800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின் ஊடக இணைப்பாளர் மல்லவாராச்சி இன்று வெளியிட்டார் யாழ். சிவில் அலுவலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த அறிவித்தலை உத்தியோக பூர்வமாக அவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வயதின் அடிப்படையில் ஓய்வுபெற்றவர்கள், சேவை அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும்...
வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நளினி முருகன் இருவருக்குமிடையே இன்று சந்திப்பு இடம்பெற்றது. வேலூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள நளினி – முருகன் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நளினி – முருகன் இன்று சந்தித்து பேசினர். காலை 7.30 மணிக்கு ஆண்கள் ஜெயிலில் இருந்து முருகனை பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவரும் 8 மணிவரை ½ மணிநேரம் சந்தித்து பேசினர். டி.எஸ்.பி. பன்னீர்செல்வம் தலைமையிலான பொலிஸார் பாதுகாப்பில்...
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் காட்டு யானைகள் நடத்திய தாக்குதலில் 6 கிராமங்களில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. காட்டு யானை தாக்குதலில் வீடுகள் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளன. அதேவேளை காட்டு யானைகளில் தாக்குதல் காரணமாக பல விவசாய நிலங்களும் அழிவடைந்துள்ளன. தமது கிராமங்களில் காட்டு யானைகளில் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே வவுணதீவு குளத்திற்கு அருகில் உயிரிழந்த யானை ஒன்றின்...
நீண்டகாலமாக பௌத்தர்களின் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்த தம்புள்ள பள்ளிவாசல் ஜனாதிபதி மஹிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் மறைமுக ஆசியுடன் இடித்து நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது. இதுவரை காலமும் பள்ளிவாசலை அவ்விடத்தில் இருந்து அகற்ற விடமாட்டோம் என்று வீரம் பேசிய முஸ்லிம் அமைச்சர்களும், ஜனாதிபதி முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய மாட்டார் என்று சரணாகதி அடைந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் மூக்குடைபட்டு நிற்கின்றனர். இந்நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதைப் போல உடைக்கப்படும் பள்ளிவாசலை அரசாங்கம் கைகாட்டும் மாற்று...
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு ஒன்றை நடாத்த உள்ளார். பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் உறுப்பினர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடாத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெசாக் பௌர்ணமி நிகழ்வுகளைத் தொடர்ந்து இந்த விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி...
தெற்கில் மாபெரும் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் தயாராகழ வருகிறது. இதற்காக பாரிய பிரசாரங்களையும் விளம்பரங்களையும் இலங்கை அசு மேற்கொண்டு வரகிறது. இதேவேளை வடக்கு கிழக்கில் போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசு தடைவிதித்து அச்சுறுத்தி வருகின்றது. இறந்த மக்களை நினைவுகூர்ந்தால் அது புலிகளை பெருமைப்படுத்தும் நிகழ்வாக அமையும் என்றும் இலங்கை இராணுவத்தரப்பு கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றியீட்டியமை தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இந்த முறை மாத்தறையில்...
மே-18 ஆம் திகதியை எல்லோரும் எதிர்பார்த்துள்ள நிலையில் முள்ளி வாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறுகின்ற இந்த வேளையிலே அந்த நினைவு கூறும் நிகழ்வுகளை தடுக்கின்ற செயற்பாட்டில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமையினை நினைக்கின்ற போது கவலையையும்,வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,, முள்ளிவாய்க்காலிலே நடாத்தப்பட்ட அனர்த்தங்கள்களின் போது...
' யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளமைக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தியுள்ளனர். இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் கோரியுள்ளனர். யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. இந்த அச்சுறுத்தல்கள் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக யாழ்....
  இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரைசுவாமிநாதன் இலங்கை விஜயம் யாழ்ப்பாணத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை - இந்தியா - மாலைதீவு இணைச் செயலாளரான திருமதி சுஜித்ரா துரை சுவாமிநாதன், இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 7 வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், ஒவ்வொரு வீடும் தலா 5...
அரசாங்கம் பற்றி வெளியே விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் நடைபெற்றது. அரசாங்கத்தின் சட்ட மூலங்கள் மற்றும் வேறு நிர்வாக விடயங்கள் தொடர்பில் கருத்து முரண்பாடு இருந்தால் நேரடியாக சொல்ல வேண்டும். பின்னால் சென்று வேறு வேறு இடங்களில் சொல்வதில் பயனில்லை. அமைச்சரவை அல்லது நாடாளுமன்றக்குழுக் கூட்டங்களில் இது...