புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான  யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார்....
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் தலைமையில் அனைத்துப் பீட பீடாதிபதிகளும் மாணவ ஆலோசர்களும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் சிலரும் நேற்று (07.05.14) யாழ் இராணுவத் தரப்பை சந்தித்துள்ளதாக  தெரியவருகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு வாரத்தை முன்னிட்டு நேற்றைய தினம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டது. அத்துடன் பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்த சிலருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாட்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் நினைவுகூரப்படுகிறது....
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என ஜனநாயகக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கால பொது அல்லது ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய மக்ளக் சுதந்திரக் கூட்டமைப்பை தோற்கடிக்க சிங்கள பௌத்த வாக்குகள் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிந்து அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் மட்டும்...
சம்பூர் நிலப் பிரச்சினை: இழப்பீட்டுக்கு 300 மிலியன் ரூபாய் ஒதுக்கீடு இலங்கை அரசு, சம்பூரில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மேற்கொள்ளப்பட்ட நிலக்கையகப்படுத்தல் முயற்சியில் நிலமிழந்த மக்களுக்கு, இழப்பீடு வழங்க 300 மிலியன் ரூபாய் ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இலங்கை உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு இந்தத் தகவலைத் தெரிவித்தது. சம்பூரில் இந்தப் பிரச்சினை காரணமாக இடம்பெர்ந்தோர் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணையில் அரச வழக்கறிஞர் இதனை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசின் இந்தத்...
பள்ளிவாசலுக்கும் செல்வதற்கு தனக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், அவ்வாறு தடை விதிக்கவும் முடியாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். தேசிய பொது வழிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய காமினி ஜெயவிக்ரம பெரேரா, கசினோ சூதாட்ட சட்டத்துக்கு அஸ்வர் எம்.பி. ஆதரவு வழங்கியதாகவும் அவருக்கு பள்ளிவாசல்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்த அஸ்வர் எம்.பி., அவ்வாறு எந்த...
சர்வதேச மட்டத்தில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்ற தம்புள்ளை பள்ளிவாசலின் ஒருபகுதி நேற்றிரவு வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளால் இடிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிவாசல் கட்டடத்தை அண்டிய கட்டடங்கள் பாதை அபிவிருத்திக்காக பெக்கோ இயந்திரங்கள் மூலம் அகற்றப்படுவதாகவும், பெக்கோ இயந்திரங்கள் பள்ளவாசலை அண்டியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றை பொலிசாரின் பாதுகாப்புடன் இனாமளுவே சுமங்கல தேரர் நேரடியாக நின்று வழிநடத்தி வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித பூமி அபிவிருத்தி என்ற பெயரில் தம்புள்ளைப்...
   சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக, அவர் பதவியேற்றபின், சீனாவுடன் நல்லுறவை ஏற்படுத்தினார். பல சீன நிறுவனங்கள், குஜராத்தில் முதலீடு செய்து, அம்மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மோடி தலைமையில் அரசு அமைந்தால், சீனா இந்தியா இடையேயான நட்பு, மேலும் பலமடையும்....
இந்தியா- இலங்கை இடையிலான, விரிவான சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, நேற்றுடன் முடிவடைந்தது. இலங்கை தலைநகர், கொழும்புவில் நடந்த இரண்டு நாள் பேச்சில், இந்திய வெளியுறவு துறை இணை செயலர் அமன்தீப் சிங் தலைமையில், அணுசக்தி துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இலங்கையின், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி துறை செயலர் தாரா விஜயதிலகே தலைமையில், அந்நாட்டு அணுசக்தி கமிஷன் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள்...
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன் வைத்திருந்த உறவை குறித்து பிரத்யேகமாக கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதிய கட்டுரையில், எனக்கும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டனுக்கும் இடையே நடந்த சம்பவம் குறித்து மிகுந்த வேதனை அடைகிறேன்.எனது கடந்தகாலம் குறித்த சர்ச்சைகளை...
ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் சாமோஸ் என்ற தீவிற்கு அப்பால் கடலில் மூழ்கியிருக்கின்றன.இந்த விபத்தில் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், மேலும் பத்துப் பேர் காணாமல் போயிருப்பதாக கிரேக்க கரையோர காவற்படை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 18 பேர் பெரியவர்கள், 4 பேர் குழந்தைகளும் அடங்கும். கடலில் தத்தளித்த சமயம் காப்பாற்றப்பட்ட 36 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் எந்த நாட்டைச்...