பா.ஜ.க பிரதமர் வேட்பாளரான மோடி வகுப்புவாத வன்முறையை தூண்டிவிட்டு அசாமில் கலவரத்தை உருவாக்கிவிட்டுள்ளதாகவும், அதே போல் மேற்கு வங்கத்திலும் மக்களிடம் மதம் மற்றும் சாதி வெறியை தூண்டி கலவரம் ஏற்படும் வகையில் பேசி வருகிறார். இவ்வாறு பேசி வரும் அவரை கைது செய்வதுடன், மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இனி அவர் கலந்து கொள்ளவும் தடை விதிக்கவேண்டும் என மம்தா கேட்டுக்கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள கிரிஷ்...
  ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாதவன். அதன்பிறகு ‘என்னவளே’, ‘மின்னலே’, ‘ரன்’ போன்ற பல வெற்றிப்படங்களை நடித்துவந்தார். சாக்லெட் பாயாக வந்த மாதவன் பிறகு ஆக்சன் ஹீரோவாக மாறினார். அவர் நடித்த ஆக்சன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாது இந்தியிலும் பல படங்களில் நடிக்க தொடங்கினார். இந்தியில் படவாய்ப்புகள் குவிந்ததால் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் கவனம் செலுத்தாமல் இருந்தார். தற்போது மீண்டும்...
பிரேசில் நாட்டில் வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி தொடங்கும் உலககோப்பை கால்பந்துப் போட்டி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்தப் போட்டியின் துவக்கவிழாவில் கொடிகளை ஏந்தி செல்லும் சிறுவர்களுக்கான தேர்வு புது டெல்லியில் இன்று நடைபெற்றது. அடிடாஸ் விளையாட்டு பொருட்கள் விற்பனை நிறுவனத்தின் நட்சத்திரத் தூதரான பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். டெல்லி நகரைச் சேர்ந்த 500 சிறுவர்கள்...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர்  தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாகவே முதலமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர், 'கோல்டர்' பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  
யாழ். குடாநாட்டின் புறநகர்ப்பகுதியில் இன்று மாலையில் இனந்தெரியாத நபர்களினால் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்தினைக் கண்ணுற்று மக்கள் பீதியில் உறைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை மக்கள் அறிய முற்பட்டபோதிலும், அச்சத்தால் அருகில் செல்வதை தவிர்த்து  வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், சில மணிநேரங்களின் பின்னர் குறித்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டிருந்ததாக அவதானித்தவர்கள் குறிப்பிட்டனர். - See more at: http://www.newstamilwin.com/show-RUmsyFTYLYlsz.html#sthash.chEGkyzY.dpuf
நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன.காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும்...
சென்னை 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் டோனி சாதனை படைத்துள்ளார்.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை சாய்த்து 5வது வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணித்தலைவர் டோனிக்கு ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் இது 100வது (169 ஆட்டத்தில்) வெற்றியாக அமைந்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 63 வெற்றிகள், சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சுக்காக 10 வெற்றிகள், சர்வதேச 20 ஓவர்...
ஐ.பி.எல் கிரிக்கெட் லீக் தொடரில் ‘ஹாட்ரிக்’ தோல்வியடைந்த பெங்களூர் அணி சொந்தமண்ணில் இன்று ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இன்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் பெங்களூர், ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூர் அணியில் கெய்ல் இல்லாத போதும் டெல்லி, மும்பை அணிகளை வீழ்த்தி இத்தொடரை வெற்றியுடன் தொடங்கியது. அடுத்து கொல்கத்தா அணிக்கெதிராக வெற்றி பெற...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டக்காரர்களின் முக்கியத்துவத்தைப் போலவே பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்து வீச்சும் முக்கியத்துவம் வாய்ந்தது.அந்த வகையில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான மலிங்காவின் ’ஹாட்ரிக்’ பந்து வீச்சு மறக்க முடியாத ஒன்றாகும். ஆகஸ்ட்-2011 ஆம் ஆண்டு கொழும்புவில் நடந்த போட்டியில் இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் வாட்சன், பொண்டிங், கிளார்க்,...
இந்திய அணிக்கு டோனி இன்னும் 4 ஆண்டுக்கு அணித்தலைவராக இருப்பார் என்று பிளமிங் தெரிவித்துள்ளார்.நியூசிலாந்து அணியின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீபன் பிளமிங் ஐ.பி.எல். போட்டியின் தொடக்க கால கட்டங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக விளையாடினார். தற்போது அவர் அந்த அணியின் பயிற்சியாளராக உள்ளார். இந்நிலையில் ஸ்டீபன் பிளமிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்திய அணித்தலைவரான டோனி தற்போது நல்ல உடல்நிலையில் உள்ளார். இவரால் இன்னும் 3 அல்லது...