சர்வதேச சயாதீன விசாரணைகளை தடுக்கும் நோக்கிலேயே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களையும், தனிப்பட்ட நபர்களையும் அரசாங்கம் தடை செய்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2009ம்; ஆண்டு யுத்தம் தொடர்பில் சாட்சியமளிக்கக் கூடிய சிவிலியன்களை ஒடுக்குவதே இந்த முயற்சியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அர்த்தமுள்ள வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை உள்நாட்டு வெளிநாட்டு சமூகங்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட பொலிஸ் பிரிவு கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5ஆவது மாடியில் இந்த விசேட பொலிஸ் குழு செயற்பட தொடங்கியுள்ளது. சமய முரண்பாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின் இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட...
செயல் நுணுக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கசினோ சூதாட்ட சட்டத்தை எதிர்த்து வாக்களித்த ஜாதிக ஹெல உறுமயவை பாராட்டுகின்றோம். அவர்கள் தமது கடமையை சரிவர நிறைவேற்றியுள்ளனர் என பொதுப ல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தால் கசினோ சட்டத்தை அமுல்படுத்துமா அல்லது தடை செய்யுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார். இது தொடர்பாக கலகொட அத்தே ஞானசார தேரர்...
யுக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர்.இருப்பினும் இதுவரை பொருளாதாரத் தடைகள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் எதிர்வரும் திங்கட்கிழமை பொருளாதாரத் தடைகள் தொடர்பான விபரங்களை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. யுக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டுவரும் கிளர்சியாளர்களை ரஷ்யா வழிநடத்துவதாக மேற்குலக நாடுகள் தெரிவிக்கின்றன. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்க...
தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து அந்நாட்டு பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். முன்னரே தாம் பதவி விலக எண்ணிய போதிலும் இந்த சம்பவத்தை கையாள வேண்டிய பொறுப்பு காணப்பட்டதனால் தாம் அப்போது பதவி விலகவில்லை. எனினும்...
குழந்தைகளை கையாளுவது அவ்வளவு சுலபமான விடயமல்ல.கோபத்தில் அவர்களைச் சமாளிப்பது வெறுப்படைய வைப்பதுடன் சற்றும் சுவாரஸ்யமாக இருக்காது. அதே நேரம் அவர்களை சரியாகக் கையாண்டால் ஒரு நல்ல பெற்றோருக்கு எடுத்துக்காட்டாகத் திகழலாம். இதோ குழந்தைகள் கோபம் கொள்ளும்போது அவர்களை எப்படி கையாள்வது என்பதை பார்ப்போம். கோபத்தில் அமைதியாக கவனித்தல் குழந்தைகள் கோபம் கொண்டு அழும்போதோ அல்லது ஏதாவது பொருட்களை தூக்கி உடைக்கும்போதோ, பதிலுக்கு நாம் அவர்கள் மேல் கோபம் கொள்ள கூடாது. அந்த நேரங்களில் அமைதி...
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Samsung நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட கைப்பேசி Galaxy S5 ஆகும்.இதனை Verizon நிறுவனம் முன்பதிவு மூலம் தனது வாடிக்கையாளர்கள் பலருக்கு விற்பனை செய்திருந்தது.இந்நிலையில் இக்கைப்பேசியின் கமெரா முறையாக தொழிற்படவில்லை என பல பாவனையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதனை ஆய்வு செய்த சம்சுங் மற்றும் Verizon நிறுவனங்கள் அக்கோளாறை உறுதி செய்ததுடன், தமது கமெராக்களை மாற்றிக்கொள்வதற்கு சம்சங் நிறுவனத்தின் ஹெல்ப்லைன் உடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளது. Camera Failed என தோன்றும்...
வாலி படத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்து படங்கள் நடித்து முன்னணி வரிசையில் இடம்பிடித்த ஜோதிகா, மொழி, சந்திரமுகி ஆகிய படங்களில் சிறந்த நடிகை விருதையும் பெற்றிருந்தார். ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வைத்திருந்த இவர் திடீரென திருமணத்தில் குதித்து பின் நடிப்புக்கு முழுக்கு போட்டது அனைவரின் மனதிலும் புயலடிக்க செய்தது.தற்போது மீண்டும் ஜோதிகா ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது பசங்க திரைப்படத்தை இயக்கிய பாண்டிய ராஜ்...
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படம் "வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்". இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் "சோலார் ஸ்டார்" ராஜகுமாரன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளி வந்துள்ளது. அது என்னவென்றால் நம்ம "பவர் ஸ்டார்" இதில் இருக்கிறாராம். நீண்ட நாள் சந்தானம் இது பற்றி வாய் துறக்கவே இல்லை, ஆனால் இந்த செய்தி எப்படியோ கசிந்து விட்டது. "பவர் ஸ்டார்" கண்ணா லட்டு திங்க...
கடந்த இரண்டு வருடமாக படங்களை இயக்காமல் இருந்த பார்த்திபன் தற்போது கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்ற பெயரில் புதிய படம் இயக்கி வருகிறார். தன் படங்களில் புதுமையான எண்ணங்களை கொண்டு நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் என்றே சொல்லலாம். இவர் கதையே இல்லாமல் ஒரு படத்தை இயக்குகிறேன் என்று சொல்லி அமலாபால், ஆர்யா, டாப்ஸி, விஜய் சேதுபதி, விஷால் என ஒரு சினிமா வட்டாரத்தையே வைத்து படம் இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில்...