கப்பலை கடத்தி மாலுமிகளை சித்திரவதை செய்த குற்றத்திற்காக சோமாலிய கடற்கொள்ளையனுக்கு ஜேர்மன் நீதிமன்றம் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.கடந்த மே 2010ம் ஆண்டு இரசாயன டாங்கர் கப்பல் ’மரிடா மார்கரெட்’ உட்பட 22 மாலுமிகள் கடத்தப்பட்டனர்.இவர்கள் 6 மாதம் கழித்து ஜேர்மன் கப்பல் நிறுவனத்தால் 5 மில்லியன் டொலர்கள் செலுத்தியபின் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் 44 வயதான சோமாலிய கடற்கொள்ளை தலைவன் கடந்த 2013ம் ஆண்டு அகதி அந்தஸ்து...
  மகள் கர்ப்பமாக இருப்பதால் அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகிழ்ச்சியடைந்துள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன் (34).கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் செல்சியா தற்போது முதன் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவல் அறிந்ததும் கிளிண்டனும் அவரது மனைவி ஹிலாரியும்...
பாகிஸ்தானில் பெண்களின் உரிமைக்காக போராடிய மாலாலாவின் ஓவியம் ஏலத்திற்கு வருகிறது.பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா, பெண்களின் உரிமை மற்றும் அவர்களின் கல்விக்காக போராடி தலிபான்களின் தாக்குதலுக்கு ஆளான இளம் பெண் ஆவார். இந்த செயலுக்காக பல்வேறு நாடுகளின் விருதுகளை பெற்றுள்ள இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவரது முழு உருவ ஓவியம் ஒன்று இங்கிலாந்தின் தேசிய ஓவிய அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஓவியம் அடுத்த வாரம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலமிடப்படுகிறது....
 மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் நிகழ்வில், ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் நொபுகிரோ றோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜித், உற்பத்தி ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத், பொருளாதாரப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீளகுடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மண்முனைப்பாலத்திற்கு செல்லையா இராசதுரை பிரதேச...
    இரண்டு வார காலக்கெடு: அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இலங்கையின் வடக்கே, வில்பத்து சரணாலயப் பிரதேசத்தை ஆக்கிரமித்து முஸ்லிம் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளதாக கடும்போக்கு பௌத்த அமைப்புகள் குற்றச்சாட்டுக்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், அவ்வாறான குற்றச்சாட்டுக்களை முஸ்லிம் தலைவர்கள் நிராகரித்துவருகின்றனர். இந்த சூழ்நிலையில், கடற்படை முகாம் அமைப்பதற்காக பெருமளவு நிலப் பிரதேசம் கையகப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் காணிகளை இழந்துள்ள முஸ்லிம் குடும்பங்களே வில்பத்து சரணாலய பகுதியில் குடியேறி இருப்பதாக வெளியாகியுள்ள ஊடகச் செய்திகளை மறுதலித்து இலங்கை...
  விஞ்ஞான வளர்ச்சி, மனிதனின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதுடன், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிந்தித்துக்கூடப் பார்த்திராத சாதனைகளைப் படைத்திருக்கிறது. வளர்ச்சி என்கிற பெயரிலும், நாகரிகம் என்கிற போர்வையிலும், 21-ம் நூற்றாண்டு மனிதன் படைத்திருக்கும் சாதனைகள் அளப்பரியது, சந்தேகம் இல்லை. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும், நவநாகரிக உலகின் மாற்றமும், சமீபகாலமாக இயற்கையைச் சீண்டி விளையாட முற்படுகின்றனவோ என்று தோன்றுகிறது. இயற்கையின் சீற்றங்கள் தன்னை வென்றுவிட நினைக்கும் மனிதகுலத்தின்மீது மட்டும்...

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடுத்த மனுக்கள் தொடர்பிலான தீர்ப்பு வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்று இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி...
  யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கிணறொன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மறைக்கல்வி ஆசிரியையான இளம்பெண் ஒருவரின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் நடைபெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். ஜெரோமி கொன்ஷொலிட்டா என்ற அந்த 22 வயது பெண்ணின் மரணம் தொடர்பில் உரிய சாட்சியங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும், அவர்மீது வன்முறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கான தடயங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆயினும் இந்தப் பெண்ணின் மரணம்...
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ (John William Ashe) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். 2014ம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக முக்கியமான அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுச் சபையில் சகல உறுப்பு நாடுகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள ஒருங்கிணைவு குறித்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பும் அமைச்சும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அரசாங்கத்தினால் அண்மையில் தடை செய்யப்பட்ட 16 புலம்பெயர் தமிழ் இயக்கங்களுக்கும் புலிகளுக்கும் உண்டான தொடர்பு குறித்து தெளிவுபடுத்தப்பட உள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கையில் உள்ள ராஜதந்திரிகளுக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விளக்கம் அளிக்கவுள்ளார். உயர் பாதுகாப்பு அதிகாரிகளும் இந்த கூட்டத்தில்...