தொடர் ஆட்டநாயகன் விருது வென்றார் விராட் கோஹ்லி

225
6வது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தொடர் ஆட்டநாயகனாக இந்திய அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகளால் வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தப் போட்டியில் 85 ஓட்டங்கள் குவித்த சாமுவெல்ஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

அதேபோல் தொடர் முழுவதும் அசத்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கிய விராட் கோஹ்லி தொடர் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த தொடரில் விராட் கோஹ்லி நியூசிலாந்துக்கு எதிராக 23 ஓட்டங்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 55 ஓட்டங்கள் (நாட் அவுட்), வங்கதேசத்திற்கு எதிராக 24 ஓட்டங்கள், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 82 ஓட்டங்கள் (நாட் அவுட்) மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 89 ஓட்டங்கள் (நாட் அவுட்) எடுத்தார்.

3 அரைசதத்துடன் 29 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 273 ஓட்டங்களை குவித்துள்ள கோஹ்லி இந்த தொடரில் இந்திய அணிக்கு ;ரன் மிஷி’னாக விளங்கினார்.

SHARE