தொடர் மழையினால் மரக்கறிகளின் விலை உயர்வு

216

நாட்டில் தொர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காலநிலையினால் மலையகத்தின் அட்டன் மற்றும் தலவாகலை நகரங்களில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி விபாயாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை பகுதியில் மரக்கறி பயிர்செய்கை வீழ்சியடைந்துள்ளதால்  தம்புள்ளையிலிருந்து மலையக நகரங்களூக்கு மரக்கறி வருகை வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில் நுவரெலியா, வெளிமடை, வெள்ளவாய, பண்டாரவளை பகுதிகளிலிருந்தே குறிப்பிட்ட அளவிலான மரக்கறிகள் எம்மால் கொள்ளவனவு செய்ய முடிக்கின்றதாக  வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

 சகல மரக்கறி வகைகளும் 160 ரூபாய்க்கு மேல் விலையேற்றம் பெற்றுள்ளது. போஞ்சி 1கிலோ 270 ரூபாய், கரிகொச்சிக்காய் 1 கிலோ 280 ரூபாய், கரட் 1 கிலோ 200 ரூபாய், தக்காளி 1 கிலோ 200 ரூபாய் ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்டுவதாக மரக்கரி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்  

7e2174bb-6230-4fe6-b8ed-bd1b952ebc3f e9444c88-43b3-43d7-b3d8-375bc67d30f9 f2215903-2476-466a-ab42-8aa66dbd9795

SHARE