தொடை, அடிவயிறு கொழுப்பை குறைக்கலாம்: சூப்பர் ஐடியா

167

அடிவயிறு மற்றும் தொடைப் பகுதிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை கரைக்க தினமும் ஜம்பிங் ஜாக்ஸ் மற்றும் அப்லிஃப்ட் ஹோல்டு எனும் இரண்டு வகை உடற்பயிற்சிகளை செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஜம்பிங் ஜாக்ஸ் (Jumping Jacks)

முதலில் விரிப்பில் நேராக நின்று கால்களைச் சற்று அகட்டி குதிக்க வேண்டும். அதே நேரத்தில் கைகளைத் தலைக்கு மேல் உயர்த்திக் குதித்துக் கொண்டே தட்ட வேண்டும். இப்பயிற்சியை தினசரி 5 நிமிடங்கள வரை செய்ய வேண்டும்.

பலன்கள்
  • இதயத் துடிப்பு அதிகரிக்கும்.
  • உடல் எடை கட்டுக்குள் வரும்.
  • ரத்தோட்டம் சீராகும்.
  • கெட்டக் கொழுப்புகள் கரையும்.
  • தொடைப்பகுதி தசைகள் வலிமையாகும்.

அப்லிஃப்ட் ஹோல்டு (Uplift Hold)

முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொண்டு கால்கள் மற்றும் கைகளை ஒரே சீராக மேலே உயர்த்தும் போது, முழங்கை மற்றும் முழங்காலை மடக்காமல் தூக்கி, 90 டிகிரி கோணத்தில் கை மற்றும் கால்களை உயர்த்தியபடி சில நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்.

பலன்கள்
  • அடிவயிற்றுப் பகுதி தசைகள் குறையும்.
  • கர்ப்பப்பை வலிமை அடையும்.
  • சிறுநீர் சீராக வெளியேற்றப்படும்.
  • தொப்பை குறையும்.

SHARE